Tuesday, December 21, 2010

அப்பா

பொதிகை தொலைக்காட்சியின் ஒரு நிகழ்சிக்காக நன் எழுதிய கவிதை ... அப்பா என்னும் தலைப்பிலே பத்து வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றார்கள் . படித்து உங்கள் விமர்சனங்களை அளியுங்கள் . 'A ' வாக இருக்கிறது என்று சொல்லாதீர்கள் :-) . A1 ஆ௧ இருக்கிறதா என்று சொல்லுங்கள் ... 

அப்பா

'விந்தை'க் கொடுத்ததாலே மட்டும் நீ தந்தை அல்ல !
என்னை விந்தை ஆக்க படிக்கச் செய்தாய் !
சில நேரம் அடிக்கவும் செய்தாய் !

எனக்கு சிறு காய்ச்சல் என்றால் கூட துடி துடித்தாய் !
உன் வயிறும் மனமும் வாடி இருந்தும்
என்னை சிரிக்க வைக்க நடிக்கவும் செய்தாய் !

ஒரு பெண்ணால் பித்து பிடித்து சொத்து கேட்டு ,
Initial கொடுத்த உனக்கே இம்சை கொடுத்தேன் !
ஆனாலும் எனக்காக அழுது ஆராதிக்கும் நீ
என்றும் என் God , father => God father !!!

Tuesday, November 30, 2010

வருணனை ஆனால் உண்மை

பர்தா போட்டு எதிரே ஒரு முஸ்லிம் நங்கை வந்தாள் .. அந்த வெள்ளை உடம்பில் கருப்பாக இருந்தது அந்த இமை மட்டும் தான் . கூந்தல் இன்னும் கூட கருப்பாக இருந்திருக்கலாம் . ஆனால் அந்த கருப்பு வானம் மூடி விட்டது . கண்கள் சொக்கியது . பாதி காரணம் 4:30 மணி அதிகாலை என்பதால் . மீதி காரணம் அவளால் .. காலேஜ் ID கார்டு , கையில் இன்ஜினியரிங் புக் பார்த்தேன் .. அவளோடு ஆட்டோவில் செல்லும் போது ஒரு கவிதை தோன்றியது .
 
1 கருப்பு wallet
2 இன்ஜினியரிங் புக் வச்சுகிட்டு 
3 சக்கர வண்டியில்  
4 வருட பட்டம் வாங்க
5 அடி பட்டாம் பூச்சி
பர்தா போட்டு செல்கிறது ...

Tuesday, October 19, 2010

காலத்தை வென்றவன்

ஏன் வாழக்கையில் இவ்வளவு சோதனைகள் ? இதெல்லாம் எனக்கு மட்டும் தான் நிகழ்கிறதா ? 24 வயதில் 64 வயது முதியவனைப்போல் நோய் பிடித்தும் , பேய் பிடித்தும் கொள்கிறதே ...

கோள்கள் என் வாழ்வில் கோலம் செய்கிறதா ?

பிகரையும் , சிகரையும் ருசிக்க வேண்டிய வயதில் , CT ஸ்கேன் , IVP X-Ray என்று வாழ்க்கை ஓடுகிறதே என்று மன உளைச்சல் அடைந்தேன் .

ஒரு சில கவிதை கூட நொந்து போய் எழுதினேன் .

மருத்துவமனையில்
மணிக்கணக்கில் காத்திருப்பதை விட
mortuary எவ்வளவோ மேல் ...

வீட்டுமனை வாங்கலாம் என
பணம் சேர்த்தேன் ..

மருத்துவமனையிலயே வாழ்பவனுக்கு
வீட்டு மனை ஏன் ?


வியாதி வதைக்கிறதோ ? விதி வதைக்கிறதோ ? சேதம் ஏகத்துக்கு தேகத்துக்கு .
பின் நானே மனதைத் தேற்றிக்கொண்டு சீக்கு இருந்தால் என்ன ? தேக்கு போல மனசும் , ஊக்கு விக்க சில பெருசும் இருந்தா வாழ்க்கைக் கடலில் எதிர் நீச்சல் போட்டு கிட்டே கரையத் தேடுலாம் ...

ஊக்கு விக்க பலர் உயிரோட இருந்தாலும் , உயிர் நீத்த கண்ணதாசன் , இந்த அன்புவின் நேசன் , கவிகளின் ஈசன் வரிகளுக்கு ஈடாகுமா ? படித்த உடன் இரும்பிலே இதயம் முளைத்து , அதில் காந்தம் போல தன்னம்பிக்கையும் , அமைதியும் ஒட்டிக்கொண்டது .

வாழ்க்கைக்கான தேசிய கீதம் இந்த பாடல் . தலை முறைகள் பல தாண்டியும் தேவைப்படும் பொக்கிஷம் இது .

மயக்கமா? கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?...

வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனையிருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி நிலவும்
(மயக்கமா)

ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடு
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

Tuesday, August 24, 2010

24 hrs of Oscillation at 24 !!!

(Bar is one place where u can hear interesting stories . When alcohol gets in , guys speak out a lot from the heart or mouth . A 24 year old guy karthi , who had 2 quarters of Old monk rum went out of control , backprocessed his time machine 3 years back and spoke a lil about his love , lot abt IT life , personal life and etc., . Though it was emotional its so funny . So , I thought of blogging it . Here u go ... At that night , from the alcohol blooded fun freak karthi ... )

Many of them till the age 24, would not have swim against the tides in the sea of life. After 12 years of school life and 4 years of college life, everyone expects a job, that too with a hefty pay in a reputed company . The same thing happened me and pay is hefty compared to average Indian sal of Rs.10  .

I was offered a job in a MNC, software company . I think the feeling of getting first offer letter is incredible and is as good as the first French kiss from a girl friend. On the first day of corporate life ( so called by the old buffaloes over there ) , I was very happy with introduction by HR's (especially good looking female HR's) , north Indian pals in my project , 'mals' in my company or IT park, buffet lunch at a hotel and a multistoried building with 24 hrs of A/C and vending machines of coke to coffee at the work environment .

But many of the losers like me can afford to taste only coffee and soup as the girls and mals had been hijacked by the terrorists before my mouth say a word 'Hi or Hello ‘. Then all the losers like me formed a gang and made fun of the psycho managers , dump team leads , funny senior managers and HR's , cursed the couples and nick named the good and bad looking girls to aunts and raped the hotties with our starry looks itself .

On the first weekend with the account soared to a 20K plus for the first time in life , with a rum in one hand and a chicken lollypop in the other , we raised our chest and collars as if our name was listed on the Forbes richest people in the world . Slowly the days had passed after breaking the head with some bull shit abends , fixing the code that bombed in production and other crap works sent by creepy onsite coordinators .

Then came the D day , like the day of elections for politicians , day of movie release for actors and day of court's verdict for god men , the appraisal ratings were out . I thought politics is a open sewage and software is a dried, clean land but assumptions were fallacious. I did not project myself and did not laugh at manager's senseless jokes, did not nod my head for unofficial work and behaved like a self-esteemed Dravidian . I don’t know whether it can be called a personal vendetta or a professional vendetta.

That night a spark came into my mind, why do not I write CAT. But I proved a true tamilian and went below zero in English though the scores in mathematics and DS were pretty decent. Anyhow, my dream of a consultant or investment banker was shattered. Sani bagavan loves me so much that he stays with me all the time and gives problems like Pakistan giving for India . Recession started and no way of switching companies. Being a tamil Bernard Shaw, I thought CAT is more powerful than my fate .

But in these days , though professional life was like a hell , personal life was damn gud with beer , rum or whisky , movies , friends , Hyderabad biryani and khabab's and flirting the most gorgeous and sexy female of our company ,Priya . One fine day , I received a mail saying 'Congratulations for completing 3 successful years with our organization' . I regretted for wasting 3 years of my life time in this stair less well. And 2 weeks later, I celebrated my 24th birthday also.

What should I do now? To switch comp and continue life in the same shit and do the fu**ing job and be a prey to this society and family to lead as usual life by marrying a IT girl, loan a Santro/i20 and pay EMI to a 2 bed room flat .Though the society and family feel shame in seeing me a small grocery shop owner or a hotel owner, should I try out my business skills in this capitalistic country?

I hate myself to hate the job that provides me bread and butter but could not love the sucking SW industry . Oscillating mind continues … I read once in an article ‘ The biggest risk is not taking risk ‘ . These lines keep bombarding my brain cells to come out of fear, to do what heart desires to. But donno what will happen tomorrow? If something good happens, I will surely come out big next time to write ‘A software engineer’s experience in business world’ or ‘A software engineer’s political experience ‘ .

Tuesday, August 10, 2010

ஆல் டைம் சூப்பர் ஸ்டார் !!!

திரை உலகம் என்பதே நிலை இல்லாதது . அந்த நிலை இல்லாத உலகத்தில் 35 ஆண்டுகள் தனக்கென ஓர் இடத்தை பிடித்துக்கொண்டு , இமயம் அளவு பணம் , பெயர் , புகழ் இருந்தாலும் ஏழை அந்தணன் போல் காவி உடை அணிந்து எல்லாம் மாயை என சித்தாந்தம் பேசும் celluloid சிங்கம் , ஆல் டைம் சூப்பர் ஸ்டார் , நல்ல மனிதன் ... சிவாஜி ராவ் என்கிற ரஜினிக்காக !!!

7 கோடி ரசிகன் , 35 கோடி சம்பளம்  
160 கோடி budget படம்
என எது உன்வசம் இருந்தாலும்   
அந்த  மூடிய சாக்கடையில் (சினிமா)
நீ ஒரு முத்து தான்  ! 

உளறினால் தலைப்பு செய்தி !
விசிறியோடு கூடினால்
சூடான அரசியல்  செய்தி  !
ok என்றால் தமிழ்நாட்டில் கட்சி  
teek hai என்றால் மத்தியே
மதராஸ்  வரும்  

ஆனால் உள்ளத்தில் பட்டதை
பேசும் உனக்கு திறந்த  
சாக்கடை(அரசியல்) குளியல்
தேவை இல்லை என
திரும்பி பார்க்கவில்லை !

புகழ் புரடிக்குப் பின்னல்
இருக்கும்  போதே
புகை போல கையில் 
 பிடிக்க முடியாது அலையும் 
அரிதாரக்காரர்கள்  மத்தியில்

அதையே காற்றாய் சுவாசித்து  
ஆடையாய் அணிந்து சோறாக 
உண்டாலும்  எல்லாம் அவன் செயல் 
என்று சொல்லும் நீ ஒரு
அபூர்வ ராகம் தான் !

தலையில் முடி இருந்தால் கூட  
கணம் என ஒட்டிக்கொள்ளாமல்  
வெள்ளை தாடியை உள்ளமாய் காட்டி
சித்தாந்தம் பேசும் நீ  
ராகவேந்திரா  தான் !

அண்ணாமலையின் வசூல் கண்டு  
கோலிவுட்  கொந்தளித்தது !
பாட்சாவின்  பாக்ஸ் ஆபீஸ்   
வசூலால் தென்னிந்தியா தெரித்தது  !
சிவாஜியால் பாலிவுட் பயந்தது  !

இன்று எந்திரனால்
ஹாலிவுட்டே  திரும்பும் !
அவதாரின்  வசூலை அசால்ட்டா 
அடிச்ச  இந்த கருப்பு அவதாரு  
கால் சீட்டுக்கு  காத்திருப்பார்கள்
cameroon , spielsberg !

ஸ்டைல் பார்த்து வியப்பார் anjelina !
action பார்த்து  அதிருவார் arnold !
அன்புடன் விருந்துக்கு வாருங்கள்
என அழைப்பர் ஒபாமா  
ஆனா  என்ன  கிடைச்சாலும்
தலைவர் தகுதிக்கு ஒப்பாகுமா  ?

Thursday, August 5, 2010

கொடியது மதுவா ? மாதுவா ?

மதுவின் ருசி கண்டவன்
100 கணக்கில் நோட்டுக்களை விட்டு
போதை ஏற்றினாலும்
அரையோ புல்லோ அடித்து
பித்தம் ஏறி சத்தம் இல்லாமல்
அடங்கி விடுவான் !

மாதுவின் ருசி கண்டவன்
அந்த மல்லிகையின் மயக்கத்தில்
கள்ளி அவள் மடியில்
கோடி இருந்தாலும் கொட்டி விட்டு
கோமணத்துணி எஞ்சி இருக்கையில்
இன்னும் போதை ஏற வில்லையே !
ஆசை தீர வில்லையே !
என்று அரும் பைத்தியம்
கொண்டு அலைவான் !!!

இரண்டு ருசிக்கும்
அடிமை ஆனால்
என்ன ஆகும் ?
அம்பானி சொத்து இருந்தாலும்
சப்பாணி ஆக வேண்டிய தான் !!!

Wednesday, July 21, 2010

நீ இன்றி நான் இல்லை

ஏ தண்ணிரே !

நீ !
 
மலையில் இருந்து  
விழுந்தால் அருவி !
 
விண்ணில் இருந்து
விழுந்தால் மழை !

ஓட முடியாது
நொண்டி ஆகி விட்டால் குளம்  !
  
கண்ணில் இருந்து  
விழுந்தால் கண்ணீர் !

நாங்கள் குணமாக
நீ கோபமானால் வெந்நீர்  !

வாயுக்குள் போகும் போது
குடிநீர் !
 
சிறிது வய்ற்றுக்குக் கீழ் வந்தால்
சிறுநீர் !

கோவிலுக்குள் கொஞ்சம்
துளசியோடு சேர்ந்தால் தீர்த்தம் !

எல்லோரையும் குளிப்பாட்டும் நீ
அசுத்தமானால் சாக்கடை  !

வாழ்ந்தது போதும்
என கல்லறை போனால் கடல்  !

இப்படி
என்ன பெயரில் இருந்தாலும்
பிறப்பது முதல்
இறப்பது வரை  

நீ இன்றி நான் இல்லை   !!!

Monday, July 19, 2010

ஆண்களிடம் கேட்காதீர்கள்/ சொல்லாதீர்கள் :

பெண்கள் என்பவர்கள் இல்லாது வாழ்வு இல்லை ... காற்று , நீர் , உணவு போன்று இன்றி அமையாதா ஒன்று .. இரண்டறக் கலந்தது . ஆனால் , சில நேரம் உறவுகளில் அவர்கள் உச்சத்துக்கும் வெறுப்பேற்றுவார்கள் .

தினம் 10 நிமிட இன்பத்துக்காக , அவர்களின் 10 மணி நேர புராணத்தை கேக்க வேண்டி இருக்குதே ! என்று கல்யாணம் , காதல் என்ற தெரிந்தே விழும் பள்ளத்தில் விழுந்து விசும்பிக்கொண்டே , ஹ்ம்ம் ,,, என்ன செய்ய ? அப்புடியே ஓட்ட வேண்டிய தான் ... இது என்ன அமெரிக்க வா ... சட்டுன்னு இன்னொருத்தியோட போகன்னு வாழும் ஆண்களை , அம்புகள் எய்து தினமும் கொள்ளும் பெண்களுக்கு ....

ஆண்களிடம் கேட்காதீர்கள்/ சொல்லாதீர்கள் :

காதலி காதலனிடம் ...

'propose ' பண்ணும் போது

ச .. எப்புடி இப்புடி எல்லாம் தோணுது உனக்கு ?

நான் உன்கிட்ட அந்த மாறி பழகி இருந்தேன்னா 'ஐ அம் வெரி சாரி '

'நம்ம ஏன் 'friends' ஆவே இருந்துட கூடாது ?'

நாங்கலாம் orthodox family .. 'தே வில் நெவெர் எவர் அச்செப்ட் திஸ் '

கமிட் ஆகி விட்டால் ..

7 வருடமாக காதலிக்கும் பெண் கம்பெனியில் ஒரு முக்கியமான வேலை செய்து கொண்டு இருக்கும் காதலனிடம் போன் செய்து 'என்ன கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இருக்கா இல்லையா ?'

'இப்பலாம் புளிச்சு போச்சுல ... எல்லாத்தையும் கேட்டாச்சு , பாத்தாச்சுன்னு .. போன் கூட எடுக்க முடியாத அளவுக்கு வேலை ?' பேசிகிற்றுக்கப்பவே 'குடகு' மலையில தண்ணி வர மாறி , கண்ணுலே இருந்து ஊத்து
வேற எடுத்துடும் .

நான் தானே ப்ரொபோஸ் பண்ணினேன் .. அதான் கழுட்டி விட பாக்கற ..

மனைவி கணவனிடம் :


அலுவலகத்துக்கும் பள்ளிக்கும் பறந்து கொண்டிருக்கும் கணவனிடம் , 'இன்னைக்கும் லேட்டா தான் வருவீங்களா ' ?

இந்த மாதமாவது அந்த 'ரெட்டை கோத்து' சங்கிலியை பேங்க் லேருந்து மூட்கலாமா ?

அந்த பயலுக்கு ஏதோ 'கம்ப்யூட்டர்' வேணுமாம் ... கையில காசு இருக்குமா ?

கல்யாணம் ஆனப்ப ரெண்டு படத்துக்கு போனது .. பால போன உன்னை கட்டிகிட்டு , இந்த குடும்பத்துக்கு ஆக்கி போட்டே , என் வாழ்க்கை ஓடிடுச்சு ...

எங்கப்பா சொல்ற மாறி 'டாக்டர்' மாப்புலயே கல்யணம் பண்ணிக்கிட்டு போயிருக்கலாம் ...

உங்க அண்ணனுக்கு குடுத்த காச கேக்க மாட்டியா ? உன்னைய நல்ல இழிச்ச வாயன்னு அரப்பு வெச்சு தேக்குறான் . நான் மட்டும் இல்லன்னா உன் புலப்பா ஏலம் போட்டுருப்பான் உன் அண்ணன் தம்பி எல்லாம் ...

உங்கப்பாவுக்கு விகித சோறு இனிமே நான் போடா முடியாது .. அதும் உங்கப்பா ஏதோ கலெக்டர் வேல வாங்கி வெச்ச மாறி ... எங்கப்பா தான் படிக்க வெச்சாரு , வேல வாங்கி வெச்சார் நு மூச்சுக்கு முன்னூறு தரவ முனுகிரியே . கொண்டு வர்ற 5000 காசையும் 4000 ஆக்கிடு வேணும்னா .. அந்த சரசு கடியில account வெச்சுக்குட்டு வாங்கி திங்க சொல்லு ...

60 ஆயுட்டாலும் ...

31 ஆம் தேதி வரும் 3000 ரூபாய் பென்சன் பணத்துலயும் 'அந்த பென்ஷன் பணத்துல பெரிய பய பேரனுக்கு ஒரு கா பவுன்ல மோதிரம் எடுத்து போடா கூடாது ?'

டிவி இல் நியூஸ் கேட்கும் பொது ...'நீ என்ன நியூஸ் கேட்டு கலெக்டர் ஆவோ , கலைஞர் ஆவோ வா ஆவ போற ? அத நிறுத்திட்டு அந்த தட்டுல ரெண்டு தோசையும் , கொஞ்சம் பழசும் இருக்கு ,,, திண்ணுட்டு மீதம் இருந்தா தண்ணி ஊத்தி வை .. நான் தூங்க போறேன் .'

ஏய்யா இந்த வயசுல உனக்கு என்ன ஏழு , எட்டு பொண்டாட்டி கேக்குதா ? ஊட்டுல டீ போடுறப்ப அந்த 'வேசி' மால்வாயா கடையிலதான் போயி டீ குடிக்கனுமா ? அவ கிட்ட என்ன சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டுருக்க தினம் ..

இந்த நாசமா போனவன் கிட்ட 'உப் உப் உப் ' நு .. ஊதாத ஊதாத நு தலையால அடிசுகிட்டேன் .. குடல் எல்லாம் புன்னா போயி சோறு தண்ணி இல்லாம கிடக்குறான் செத்து தொலையாம ... என் பாவத்த வாங்கி கிட்டு ...செத்து தொலஞ்சா அந்த போஸ்ட் ஆபீஸ் ல இருக்கா பணத்துல எடுத்து போட்டு , கருமாதி பண்ணிட்டு இருக்கறதா பங்கு போட்டு குடுத்து நானும் போயி சேர்ந்துடுவேன் ...

Tuesday, July 13, 2010

சாப்ட்வேர் தாவல்கள்

ஓரிடத்திலே இருந்து விட்டால்
நீ உதவாதவன்
இயலாதவன் என்று
என்னுது இந்த உலகம்

தாவிக்கொண்டே இருந்தால்
தந்து கொண்டே இருக்கிறது
இந்த சாப்ட்வேர் உலகம்

அடுத்த வீட்டு
பழைய சோறு மணக்குது
நம்ம வீட்டு
அய்யர மீனுணா கூட
ரொம்ப கசக்குது

குரங்கிலிருந்து வந்தோம்
அல்லவா ?
அதனால் தான் தாவினால்
தருகிறார்கள் போல ?
தவறினால் மிதிக்கிறார்கள் போல ?

ஊரோட ஒத்து போறேன்
நானும் குரங்கா மாறுரேன் !
அடிக்கடி சீக்கிரம் தாவுறேன் !

Wednesday, July 7, 2010

பொருந்தா காமம்

காதல் , காமம் இது இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்றாலும் , காதலோ  காமமோ  வயதை பார்த்து வருவதல்ல . 40 வயது angelina jolie ஐ 18 வயது பயனுக்கு பிடிக்காதா ? 55 வயது அப்பாவுக்குப் பிடிக்காதா ? 55 வயது அப்பா , 18 வயது பயன் இருவருமே ரசிப்பதில்லையா ? அது ஹாலிவுட் angelina மீது மட்டும்  அல்ல  , திருச்சி பீமா நகரில் இருக்கும் வெண்ணிலாவுக்கும் அது பொருந்தும் . ஆனால் சமுதாயம் , சம்பரதாயம் என்னும் வெளி உலகத்தின் பார்வைக்காக நம் ஆசைகளை , உணர்வுகளை பூட்டி  வைத்துக்கொள்கிறோம்  . இன்னும் உண்மையிலே நெஞ்சில் இருந்து சொல்ல வேண்டுமானால் , ஆண்கள் ஒரு பெண்ணை பார்க்கும்போது வயதை பார்ப்பதில்லை , வனப்பைத்தான் பார்ப்போம் . பெண்களுக்கும் இது பொருந்தும் . Converse is also true in this case .

பல பேர் முதலில் சைட் அடித்தது  , அவன் school டீச்சர் , அல்லது தன அக்காவின் தோழியை ஆக இருக்கும்  . ஆனால்  இதனை  வெளியில் சொல்லி இருக்க மாட்டார்கள் . அடுத்தவர்கள் தம்மை தவறாக எண்ணுவார்கள் என்று . தவறு , சரி என்பதெல்லாம் நமக்கு நாமே பிரித்துக் கொண்டவை , பெயரிட்டுக்கொண்டவை என பலருக்குத் தெரியாது . சிலருக்கு தெரிந்தாலும் மீற முடியாது , தம்மை சுற்றிய மூட உலகத்துக்காக ! இதனை தமிழில் அழகாக பொருந்தா காமம் என்று கூறுகிறார்கள் .

பொருந்தா என்பது என்னைப் பொறுத்தவரை சமுதாயத்துக்கு தான் . மனதுக்கோ , உடலுக்கோ அல்ல , ஊருக்குதான் . நடைமுறையில் இந்த சமுதாயத்தில் அவர்களை திருமணம் செய்து கொண்டு வாழ்வது  சாத்தியமா என்று தெரியவில்லை . அதற்கு கூட சில அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவார்கள் , கலாசார சீர்கேடு என்று . ஆனால் 22 வயது பயன் 36 வயது பெண்ணின் மேலோ , 36 வயது  பெண்  22 வயது  பயன்  மீது  காதலோ  , காமமோ  கொள்வதை  , அந்த  உணர்வுகளை 25 வரிகளில் சொல்லி இருக்கேன்  . 


அடையார் அழகி நீ தான் !
அய்யனாவரம் அழகன் நான் தான் !
பஞ்சு உடம்பு நெஞ்சழுதக்காரி நீ !
கட்டு உடம்பு கள்ளன் நான்

காதல் பன்னா தப்பு இல்ல ..
அப்ப அன்பு கொண்டா குத்தம் இல்ல ..
இதில வெக்க பட ஏதும் இல்ல ..
வயது ஒன்னும் தடை இல்ல ..
பொருந்தா காமம் புதுசு இல்ல ..

சுற்றத்தை எண்ணி
நம் அன்பின்
அர்த்தத்தை வீணாக்கீடாத !
வலிமை இருந்தா
வயச ஏன் பார்க்கணும் ?
மனதில் துணிவு இருந்தா
இந்த உலகை ஏன் நாம்
கண் நோக்கனும் ?

காலையில் பிறந்து
மாலையில் சாகும் பூவுக்கும்
பல நாள் வாழும்
வண்ணத்து பூச்சிக்கும்
காதல் வருவதில்லையா ?

ஊரை பார்க்காதடி நீ
அது வாழ்ந்தா வருத்தப்படும் !
செத்து போனா சிரிக்கும் !
தப்பும் நியாமும்
இங்க ஊருக்கு ஊரு மாறும் !
நீதி வசதிக்கேற்ப மாறும் !
மனதுக்கு பிடிச்சிருந்தா போதும்
திருமணமோ மறுமணமோ
செய்து கொள்ளலாம்
மறுபிறவியா எடுக்க போறோம் ?

பூலோகம் பிடிக்கலைன்னா சொல்லு
என் பொன் நிலவே
வெள்ளியிலே நாம்
வீடு கட்டி வாழலாம் !!!

Thursday, June 17, 2010

Census count is needed for ceasing trees or for growing population ?

I am really confused whether caste based census is needed for India . We say India a secular country , proud to call it a country which is having Unity in Diversity . Not surprisingly many of the political parties have secularism as one of the ideologies and never fail to talk about it in election speeches and manifestos . But the fact of the matter is they themselves ask for caste based census and discuss about this in parliament .Ninety percent of the small parties are cropping up today in TN with their caste strength . Vanniyars have started PMK , Udayar's have started IJK , Gounders have started KMP and the list goes on . If caste based census is allowed it will help to start some more caste based parties .

Periyar dreamed of a TN without religion and caste differences . But many in Dravidian party support the caste based census today and believe in forming alliances with these caste based parties . Dr.Kalaignar , an ardent follower of Periyar and Annadurai who started "Samathuvapuram" is looking for an alliance with caste based parties . This reminds me his poem ‘cows with the mask of tiger’. But forget it , I am not here to criticize the functioning of Dravidian parties and their aberration from the Dravidian principles . My question is when most of the parties believe in secularism , why caste based census is needed ? I know a lame reason will be given that caste based attention will be given based on the report , based on the income and status of a particular caste .

Instead of this govt can have just four or five levels based on the income and focus on each group depending on their status . And the most humiliating thing is they will have a discussion on these matters during the questionnaire hour . Caste is a hidden weapon for many people when they have step into politics , cinema , business , sports or or government ( as officials ranging from collector to V.A.O ). When everyone's blood is red , when everyone's sweat is salty and everyone is mortal how caste can add difference to anyone ? According to me, Promoting Caste based census is nothing but providing raw materials to bulid terrorist infrastructure .

Slowly we are feeling the effects of Global warming. After 20 years , I think a 750 ml water bottle will cost more than a 750 ml Blue Label whisky. And all the forests in India will become apartments, flats and plots . Real estate market will boom but at the cost of forests and farms . To my imagination, trees and water may be listed in sensex and Nifty as it will be one of the hot stocks raising steadily and swiftly.

Considering the global warming , scarcity of water and reducing trees we need to have a census count for ceasing trees and not for growing population . For this if caste based count is needed , I will welcome that whole heartedly and the caste which plants maximum number of trees can be awarded and their efforts be applauded . If Caste is a knife please use it to cut vegetables and not to kill innocent people .

Monday, June 14, 2010

சென்னை என் பார்வையில் ...





தேனீக்கள் மொய்த்திடுது எங்கு பார்த்தாலும்
ஆனால் வண்ண மலர்கள் இல்லை சுற்றிலும்
கோமானும் சீமானும் , கூலியும் பணக்காரனும்
சாப்பாட்டை சைக்கிள் carrier -ல்  வைத்திருப்பவனும்
சான்ட்ரோவில் போகும்  சாப்ட்வேர்  வர்க்கமும் !
கொசுக்கூட்டத்தோடு  குடிசையில் வாழ்பவனும்  
கோடி சம்பாரிக்கும் வியாபார காந்தமும் !
கருப்பு பணம் கத்தை கத்தையாய் வைத்து
வாழ்க்கையில் நடிக்கும் அரசியல் வாதியும்  
வண்ணத்திரையில்  நடிக்கும் கலைஞனும் !

10 அடிக்கு ஒரு bridge , சந்துக்கு  சந்து
சாப்ட்வேர் கம்பெனி ,   சாலை ஓரமெல்லாம்
குஷ்பூ இட்லியும் , கூவத்து 
சந்தனமும்  மணக்குது  ...
ஆட்குக்கால்  சூப்பும்  , ஐயிர  மீன் வருவலும்
ஆளையே தூக்குது  …
அதெல்லாம் விட தமிழ் நட்டு GDP கே
காரணமா இருக்க நம்ம  TASMAC
பள்ளிகூடத்த விட அதிகமாகும்
 கோவிலை விட கூட்டமாவும் இருக்குது …

இங்க ரோடுல  படுத்து , 'பன்' கும் 'டீ' கும்  
அளஞ்சவங்கள பங்களாவும்  BMW காரும்
வாங்க வெச்சது இந்த சிங்கரா சென்னை !
சேட்டு நகை கடை , செட்டியார் மளிகை கடை
கவுண்டர் அரிசி மில் என்று யார் வந்து
எத வெச்சாலும் வாழ வெக்குது
இந்த சென்னை பட்டணம் !

கலாம்  , காமராஜ்  , கலைஞர் ,
ரெஹ்மான் , ராஜா , ரஜினி , கமல் ,
மணி ரத்னம் , இஸ்ரோ மயில் சாமி  என
பெரிய மனிதர்களை 
உருவாக்கி விட்டது இந்த சென்னை  !
இது இருப்பது தான் இந்தியாவுக்கு கீழ
ஆனா இந்தியா மேல வருவதே
இந்த சிங்கார சென்னையால ….

Thursday, June 10, 2010

Census கணக்கு  மக்களுக்கு  தேவையா  ? மரங்களுக்கு  தேவையா  ?

சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு (census ) தேவையா ? இல்லையா ? என்று விவாதம் நடந்து கொண்டிருக்கிறது . இப்படி செய்தால் மொத்தம் உள்ள 250 சாதிகளும் கட்சி தான் துவங்குவார்கள் . எந்த விதமான முன்னேற்றத்துக்கும் இது வழி வகுக்காது . சாதியை அழிக்க போகிறேன் என்று சொல்லி சாதி கட்சியோடு கூட்டணி வைக்கிறார்கள் . நரி ஆட்டை பத்திரமாக பார்த்து கொள்கிறேன் என்று சொல்வது போல் உள்ளது  . பெருகுகின்ற மக்கள் தொகையை சாதி வாரியாக கணக்கு எடுக்க வேண்டுமா என விவாதிப்பதை விட்டு , அழிகின்ற மரங்கள் கணக்கை எடுங்கள் ... மிகவும் அவசியமான ஒன்று .


தங்கம் விலை ஏரிடுச்சுன்னு  
வையகமே  வருந்துது   
ஆனால்
இந்த வறட்சியை பார்த்தால்
தண்ணீர் விலை தங்கத்துக்கு மேலே
தாவிடும்  போலவே  !

பங்குச்சந்தையில்  
தண்ணீரையும் மரங்களையும்
வரிசைப்படுத்தும்  காலம் 
வரும் போலவே  தோழா 
இந்த  கொடுமை  தொடர்ந்தால்  ?

நிலம்  விலை ஏறுதுன்னு
மரத்தை 
இலங்கை தமிழர் போல் சாய்த்து
ரியல் எஸ்டேட்  என்று 
பூதாகர  விலை வைத்து  
பித்தலாட்டம் ஆடிநீரே
என்ன  ஆச்சு  ரியலா ?

பூமித்தாய் தவிக்கிறாள்
தன் மகனை இழந்து !
சூரியன் தன் படைகளோடு
முன்னேறி அருகில் வந்து 
போர்தொடுக்கிறான் !
அக்கினி  சுடர்களை  
ஏவுகனைகளாய் வீசி  !

TV கொடுக்கும்  அரசாங்கம்
ஓட்டுக்கு  பணம் கொடுக்கும்
அரசியல் கட்சிகள்  
இம்முறை மரக்கன்றையும்  
சேர்த்து வழங்குங்கள் ! 

சென்சசில்  இனிமேலும்
பெருகும் மக்கள்
கணக்கு வேண்டாம் !
அழியும் மரங்கள் 
கணக்கு  எடுங்கள் !
சாதி  வாரியாக  கூட எடுங்கள்
award கொடுப்போம்
அதிகம்  வளர்க்கும் சாதிக்கு !!!

Monday, June 7, 2010

In the name of Democracy

What is Democracy ? Democracy is a form of government either directly elected by the people or through elected representatives. We are supposed to elect Panchayat presidents, ward members; ward Counselors, District Counselors, M.L.A and M.P’s every time. Elections are being conducted by the hand cuffed, dumb election commission. Why I mean hand cuffed and dumb is they don’t have powers to take action against the ruling parties, whoever it is and even in some places against oppositions who are hooligans but called as politicians.

Are we really electing them? To be honest, it should be called as an auction and not as an election as every party is coming out with loads of corrupted and black money and bids for assemblies and parliament seats. Like every auction, those who bid the highest amount win the battle. Auction amount ranges from Rs.100 to Rs.1000 per vote depending on the election, candidate and competition. Votes are being bought instead of casting. Every party is in a state of mind wherein their ultimate aim is to win the elections and form their own government by corrupted money, hooliganism and caste and religion masks.

As a matter of fact, politics has become a hot business which gives billions of rupees, judicial powers, and a chance to drench in the fame rains and to dance with hotties of filmdom and finally a VVIP status. You may wonder how the white dressed politicians can grab the judicial powers of black coated attorney’s, because the wheel of law is driven by white dressed and not the black ones.

As Annadurai said it has become the last hope of scum people. For the most part it has become the destination point in their life journey. Business, Cinema and Politics were different entities before sometime and now these are like bread and butter , gulab jamun and ice cream , interlinked inseparably especially in temple city , Tamil Nadu . Because of these people, some of the educated and uneducated reformist youths have turned into Maoists . These people’s intentions are right but the approach is wrong. What can be done to stop all this bull shit? Really I don’t have the answer as life is not yuva movie to enter into political scary world and fight successfully against many Madhvan’s and Abhishek bachan’s .

To be honest , even if almighty starts a political party in this sludge system , he will either be losing the elections if he doesn’t have money and muscle power or he will have to corrupt and allow other s too , if he forms a coalition government . These are the hard truths of today’s realistic democracy followed in world’s biggest democracy, India.

Wednesday, May 26, 2010

பள்ளத்தில் விழுந்த பச்சிளம் குழந்தை

வெகு நாட்களுக்கு பின்பு எழுதுகிறேன் ... என்னை போன்று குழியில் விழுந்து விட்டோம் என எண்ணிகொண்டிருக்கும் பலருக்காக !

இங்கே இருந்து வெளியே போக முடியுமா என கலக்கத்தில்
இருக்கும் சிலருக்காக !

அப்படியே போக வேண்டும் என்றாலும் எங்கே போவது என வழி தெரியாமல் பாதை மறந்து நிற்கும் ஆடு போல , சாலையின் நடுவே பேருந்து வரும்போது எந்த பக்கம் ஓடுவது என தெரியாமல் குழம்பி நிற்கும் சிறுவர்கள் போல இருக்கும் பலரில் நானும் ஒருவன் .

இந்த பிரதிபலிப்பு , என்னைப் போன்று காசு வரும் என்று எண்ணி சாப்ட்வேர் பாதாளத்தில் காலை விட்டு வெளியேற வழி தெரியாமல் இருப்போரின் பிரதிபலிப்பு ...

இந்த மாயை உலகத்திலே
மனதருவிக் கொண்டே
மாண்டிடுவோமோ ?
என ஒரு கலக்கம் !
வெளியே சென்று
வியாபாரம் செய்தால்
வெற்றி வருமா ?
என ஒரு தயக்கம் !

அரசியல் கடலில் குதித்துல்லோமே
ஒரு காகிதம் போலாவது
மிதப்போமா ? இல்லை
அந்த பெருங்கடலில்
பெருங்காயம் கரைத்தார் போல்
பெயர் தெரியாமல் போவோமோ ?
என ஒரு குழப்பம் !

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்
பெண்மையும் பேனாவும்
எந்த லாபமும் தரா விட்டாலும்
எப்போதும் அதன் மீது
ஒரு மயக்கம் !

பாதை தெரியாது
பள்ளத்தில் விழுந்த
பச்சிளம் குழந்தை போல
விழுந்து விட்டேன் !
இந்த சாப்ட்வேர் பாதாளத்தில்

குழியில் இருந்து
வெளியேற துடிக்கிறேன் !
ஆனால் இன்னும் என்
கூவல்கள் கேக்கவில்லை போல
படைத்தவனுக்கு ! பரம்பொருளுக்கு !

யார் மீது
கோபம் கொள்ள முடியும் ?
பலி போட இயலும் ?
என் தடுமாறும் மனதுக்காக
நானே வருந்துகிறேன் !!!

Wednesday, March 24, 2010

இதயத்தில் இடமில்லை

சில நேரம் நாம் , சில விசயங்களை ... அது சந்தோசமானாலும் சங்கடமானாலும் பூட்டி வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம் ..சிலரால் முடியும் , பலரால் முடியாது . அந்த பலரில் நானும் ஒருவன் .

திணை அளவோ , வான் அளவோ ? எழுச்சியோ , வீழ்ச்சியோ ? சந்தோசமோ , சங்கடமோ ? இதயம் எனும் cloak room il அறைகள் இல்லாமல் , banking locker il இடம் இல்லாமல் , நினைவுகளை சுமைதாங்க முடியாமல் இறக்கி வைக்கிறோம் . பின் ஏனடா இறக்கி வைத்தோம் என்று வருத்தப்படுகிறோம்.

ஒருமுறையோ , பலமுறையோ , சிலரோ பலரோ இது போன்று உணர்ந்து இருப்பார்கள் ...

அந்த உணர்வுகளை பேனா மூலம் painting அடித்துள்ளேன் இந்த blog எனும் சுவரில் .

அலை அலையாய் சில
நினைவுகள் என் நெஞ்சின்
கரைகளை வந்து
தட்டும் போது ...
பெரிய மதில்களை எழுப்பி
பூட்டி வைக்க நினைக்கிறேன் !
ஆனால்
கொந்தளிப்புகள் பார்த்து
பின் நானே திறந்து
விட்டு தடுமாறுகிறேன் !

சுகமாய் இருக்கும் போது
சந்தோஷ அலைகள்
பீறிக்கொண்டு வருகிறது ..
சுமைகளால் தடுமாறும் போது
சஞ்சல alaigal
பீறிக்கொண்டு வருகிறது ..

தடுக்கும் போது
திறந்து விட்டு விடலாமே
என்று நினைக்கிறேன் !
திறந்து விட்டபின்
தடுத்து இருக்கலாமே
என்று நினைக்கிறேன் !

மூளையை பெரியதாய்
கொடுத்த இறைவன்
இதயத்தை சிறியதாய்
கொடுத்து விட்டானே என்று
விசனப்பட்டுருக்கிரேன் !

அவ்வளவு பெரிய கடலே
சில நேரம்
சுனாமியாய் உணர்வுகளை
கொந்தளிக்கும் போது
tumbler size மனம்
செய்தால் என்ன ?
என்று தேற்றிக்கொண்டு
அழுத்தம் இல்லாத மனது
endra நெகிழ்ச்சியோடும்
ஆழம் இல்லாத மனது
என்ற வருத்தத்தோடும்

இறைவனோ ...
இயற்கையோ காரணம்
என்று பலியை
அவன் மேலோ ,
அது மேலோ போட்டு
என் உணர்வுகளை
பூட்டி வைக்க முடியாமல்
பேனா மூலம்
காட்டி கொண்டிருக்கிறேன் ..
சுனாமியாய் எழுத்துக்கள் !!!

Monday, March 15, 2010

என் முதல் வெளிநாட்டு பயணம்

The other end of the world - Jacksonville

jacksonville ஊர்
ஊரெல்லாம் கார்
ஆங்காங்கே பார்
கூட்டம் எங்கும் இல்லை
இந்த ஊரில் ...
ஆனால் நாட்டம் அதிகம் உண்டு
எனக்கு ....

வெயிலும் மழையும் குளிரும்
எதிர்க்கட்சி ஆனாலும்
ஒரே மேடையில்
சொற்பொழிவு ஆற்றுகின்றன ...

பனிமழைகள் சில நேரம்
சுனை மழைகள் சில நேரம்
கண்ணாடி சாலையை
கழுவிக்கொண்டு
இருக்கின்றன ...

மூச்சிடும் சத்தம் கூட தெரியாத
ஒரு ரம்யம் !!!
டீக்கடை இல்லை ...
அரசியல் பேச ஆள் இல்லை
மறியல் செய்ய மக்கள் இல்லை
பொது பேருந்தும் share atto உம்
போக்குவரத்தை பாதிப்பதில்லை !

எதிலும் ஒரு ஒழுங்கு
தெருவெல்லாம் வண்ண விளக்கு
தினமும் ....
திருவிழாக்காலம் தான் !!!
ஆனால்
சாமியும் பக்தனும்
அரசியல் வாதியும் தொண்டனும்
வருவதில்லை ... போவதில்லை ...
சாலை வழியே ...

ஓலிநாடா கட்டி
ஒப்பாரி வைப்பதில்லை !
கட் அவுட் வைத்து
காசை கரியாக்கி
அதன் சாம்பலில்
சந்தோஷப்படுவதில்லை !
முத்தம் இடும் சத்தம் கூட
சில நேரம் கேட்கும் !
ஆனால் எவனும் குடித்து விட்டு
போடும் சத்தம் கேட்காது ...

இங்கு வந்தும் கவிதையா
என என்னலாம் ....
யாரோடு நான் பேசுவேன்
தனிமையில் தள்ளாடும்போது
பேனா தானே என்
பெண்டாட்டி ....

Wednesday, February 10, 2010

என் முதல் சினிமா பாடல்

ஒரு modern software industry la இருக்கவன் , காதலின் அவஸ்தைகள
சொல்ல முடியாம இருக்கவனோட feelings ah ...
ஒரு பாடலா எழுதிருக்கேன் ....
**********************************************************************************

பிடிப்பில்லாமல்
போய் கொண்டிருந்தேன் நான் !
காதல் பேயாய் வந்து
ஆட்டி கொள்கிறாய் நீ !

facebook il
உன் போட்டோ பார்த்து
பேசி கொண்டிருக்கிறேன்
தனியாக ...

எதிரே வந்தால்
இதயம் ஒருமுறை
நின்று போகிறது !
காதல் கண்றாவி வந்து
cholestral போல
heart ai block பண்ணுது !

உன் கூந்தல்
clips கூட சேர்க்கிறேன் !
உன் ரெட் lips பார்த்தால்
tension ஆகிறேன் !
உன் வாசம் நுகர்ந்து
8 floors ஓடி வருகிறேன் !
ஆனால் இதயம் முரளி போல்
எட்டி நின்றே பார்த்து விட்டு
என் friends கிட்டே காட்டி விட்டு
வானம் எல்லாம் தொட்டு விட்டு
பெரு மூச்சு விட்டு விட்டு
எவனுக்கோ குடுத்து வெச்சுருக்கு நு
சொல்லி விட்டு
கனவில் மட்டும்
உன்னை தொட்டு விட்டு
அலைகிறேன் ஒரு மார்க்கமாய் ...

கண்ணாடி முன்னாடி நிக்குறேன் !
lorreal எல்லாம் போகிறேன் !
peri alley போடுறேன் !
arms ஐ எல்லாம் ஏத்துறேன் !
லோன் போட்டு வாங்குன pulsar இல்
lo ... lo ... nu அலையுறேன் ....

என்ன செய்யறேன் நு புரியல
இது எல்லாம் எதுக்குன்னு தெரியல
நான் நானா இருக்க முடியல
எங்க போய் முடியும் புள்ள ....

Monday, February 1, 2010

கருவறையும் கல்லறையும்

60 ரூபாய் செலவில் கருவறையும் கல்லறையும்

கல்லறையும் கருவறையும் ஒன்று
இங்கு இருக்கும் போது
வலிகள் தெரிவதில்லை ...
சுற்றிய உலகமெல்லாம்
கருப்பாய் இருக்கும் !
நாம் ஒருவன் தான்
இந்த உலகில்
என்ற உணர்வு வரும் !

மதுவும் அப்படிதான் !
மயக்கத்தில்
வலிகள் தெரியாது ...
இந்த உலகத்தில்
நாம் ஒருவன் தான்
என்ற உணர்வு வரும் !

கருவறையை விட்டு
வந்துவிட்டேன் ...
கல்லறை பயணம் இன்னும்
நெடுந்தூரம் இருக்கிறது
என்று எண்ணுகிறேன் !
ஆனால் இந்த 60 ரூபாய் quarter
என்னை இரண்டுக்கும்
இழுத்து செல்கிறது தினமும் ....