Wednesday, March 24, 2010

இதயத்தில் இடமில்லை

சில நேரம் நாம் , சில விசயங்களை ... அது சந்தோசமானாலும் சங்கடமானாலும் பூட்டி வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம் ..சிலரால் முடியும் , பலரால் முடியாது . அந்த பலரில் நானும் ஒருவன் .

திணை அளவோ , வான் அளவோ ? எழுச்சியோ , வீழ்ச்சியோ ? சந்தோசமோ , சங்கடமோ ? இதயம் எனும் cloak room il அறைகள் இல்லாமல் , banking locker il இடம் இல்லாமல் , நினைவுகளை சுமைதாங்க முடியாமல் இறக்கி வைக்கிறோம் . பின் ஏனடா இறக்கி வைத்தோம் என்று வருத்தப்படுகிறோம்.

ஒருமுறையோ , பலமுறையோ , சிலரோ பலரோ இது போன்று உணர்ந்து இருப்பார்கள் ...

அந்த உணர்வுகளை பேனா மூலம் painting அடித்துள்ளேன் இந்த blog எனும் சுவரில் .

அலை அலையாய் சில
நினைவுகள் என் நெஞ்சின்
கரைகளை வந்து
தட்டும் போது ...
பெரிய மதில்களை எழுப்பி
பூட்டி வைக்க நினைக்கிறேன் !
ஆனால்
கொந்தளிப்புகள் பார்த்து
பின் நானே திறந்து
விட்டு தடுமாறுகிறேன் !

சுகமாய் இருக்கும் போது
சந்தோஷ அலைகள்
பீறிக்கொண்டு வருகிறது ..
சுமைகளால் தடுமாறும் போது
சஞ்சல alaigal
பீறிக்கொண்டு வருகிறது ..

தடுக்கும் போது
திறந்து விட்டு விடலாமே
என்று நினைக்கிறேன் !
திறந்து விட்டபின்
தடுத்து இருக்கலாமே
என்று நினைக்கிறேன் !

மூளையை பெரியதாய்
கொடுத்த இறைவன்
இதயத்தை சிறியதாய்
கொடுத்து விட்டானே என்று
விசனப்பட்டுருக்கிரேன் !

அவ்வளவு பெரிய கடலே
சில நேரம்
சுனாமியாய் உணர்வுகளை
கொந்தளிக்கும் போது
tumbler size மனம்
செய்தால் என்ன ?
என்று தேற்றிக்கொண்டு
அழுத்தம் இல்லாத மனது
endra நெகிழ்ச்சியோடும்
ஆழம் இல்லாத மனது
என்ற வருத்தத்தோடும்

இறைவனோ ...
இயற்கையோ காரணம்
என்று பலியை
அவன் மேலோ ,
அது மேலோ போட்டு
என் உணர்வுகளை
பூட்டி வைக்க முடியாமல்
பேனா மூலம்
காட்டி கொண்டிருக்கிறேன் ..
சுனாமியாய் எழுத்துக்கள் !!!

Monday, March 15, 2010

என் முதல் வெளிநாட்டு பயணம்

The other end of the world - Jacksonville

jacksonville ஊர்
ஊரெல்லாம் கார்
ஆங்காங்கே பார்
கூட்டம் எங்கும் இல்லை
இந்த ஊரில் ...
ஆனால் நாட்டம் அதிகம் உண்டு
எனக்கு ....

வெயிலும் மழையும் குளிரும்
எதிர்க்கட்சி ஆனாலும்
ஒரே மேடையில்
சொற்பொழிவு ஆற்றுகின்றன ...

பனிமழைகள் சில நேரம்
சுனை மழைகள் சில நேரம்
கண்ணாடி சாலையை
கழுவிக்கொண்டு
இருக்கின்றன ...

மூச்சிடும் சத்தம் கூட தெரியாத
ஒரு ரம்யம் !!!
டீக்கடை இல்லை ...
அரசியல் பேச ஆள் இல்லை
மறியல் செய்ய மக்கள் இல்லை
பொது பேருந்தும் share atto உம்
போக்குவரத்தை பாதிப்பதில்லை !

எதிலும் ஒரு ஒழுங்கு
தெருவெல்லாம் வண்ண விளக்கு
தினமும் ....
திருவிழாக்காலம் தான் !!!
ஆனால்
சாமியும் பக்தனும்
அரசியல் வாதியும் தொண்டனும்
வருவதில்லை ... போவதில்லை ...
சாலை வழியே ...

ஓலிநாடா கட்டி
ஒப்பாரி வைப்பதில்லை !
கட் அவுட் வைத்து
காசை கரியாக்கி
அதன் சாம்பலில்
சந்தோஷப்படுவதில்லை !
முத்தம் இடும் சத்தம் கூட
சில நேரம் கேட்கும் !
ஆனால் எவனும் குடித்து விட்டு
போடும் சத்தம் கேட்காது ...

இங்கு வந்தும் கவிதையா
என என்னலாம் ....
யாரோடு நான் பேசுவேன்
தனிமையில் தள்ளாடும்போது
பேனா தானே என்
பெண்டாட்டி ....