Wednesday, December 30, 2009

சென்னையில் மழை வந்தால்

On my maiden blog , I touched Srilankan issue . Though many of them felt difficult to comment on the sensational topic , its a hard truth . Last month , it rained in chennai , though the rainy season had passed much before . Also there is no clue of when it will rain , as the prettty clear , whity sky will start crying suddenly . Though the meterological department in India is very poor in forecasting weather , our Chennai Deputy Director General of Meteorology S.R.Ramanan is like a Rishi . His forecast will be perfect . When he says , cyclones are moved away we can expect a rain and its in the other way round as well .

சிங்கார சென்னை , மழை நேரங்களில் சீரழிந்த சென்னை ஆகி விடும் . தெரு முழுதும் தண்ணீர் வெள்ளமாய் நிற்கும் . அதிலும் ஆட்டோகாரன் race போவான் . D70 உம், M 70 உம் அப்போதும் நிரம்பி வழியும் . Drainage என்ற ஒன்று இந்த ஊரில் இருக்கிறதா என்ற கேள்வி எழும் ? ஏன் என்றால் சாக்கடை மேலே குமறிக்கொண்டு வரும் , மண்டை உடையும் போது இரத்தம் வெளியே வருவது போன்று . சில வீடுகளில் temporary swimming pool உருவாகும் . அங்கும் சிறுவர்கள் கப்பல் விட்டு விளையாடுவர் . Life is beautiful படம் மாதிரி இருக்கும் .

கண்ணீர் கலந்த தண்ணீரில் விளையாடுகிறோம் என்று தெரியாது இளசுகள் titanic கப்பல் விட்டு விளையாடும் . பின்னால் இருக்கும் பெரியவர்கள் அப்போதும் என் தலைவன் போல் வருமா என்று அவரவர் கட்சியை பற்றி பெருமை பேசுவர் , கொஞ்சம் தண்ணிரில் மூழ்கியுள்ள டீக்கடையில் நின்று கொண்டு , அப்படியே மனைவியின் வசை வாங்கி கொண்டு ....

இதற்காக ஏன் மழை பொழிகிறது என்று மடத்தனமாக கேட்க மாட்டேன் இயற்கையை பார்த்து ? ஏன் என்றால் , நீரின்றி அமையாது உலகு என்று எல்லோரும் உணருவர் ... அதும் சென்னை வாசிகளுக்கு மழை தீர்த்தம் போன்று , ஆத்திகன் கண்ணில் தெரியும் கடவுள் போன்று , எனக்கு ஒரு அழகான பெண் போன்று .... இதெல்லாம் எப்போதாவது நிகழ்வது தானே !!! ஆனால் எதுவும் அதிகமானால் அவஸ்தை தான் ... மிஞ்சினால் நஞ்சு தானே ?

மழையே விடாது பெய்யும் போது , தூறல்கள் ஓய்வு எடுக்காமல் தூவானம் எடுக்கும் போது , அடை மழை ஆர்ற்பரிக்கும் போது , வெள்ள பேருக்கு வீதியிலே வரும் போது , காற்று என்னும் கள்வனும் சேரும் போது ... என் காதலி தான் ஞாபகம் வருகிறாள் . அவளும் அப்புடி தான் ... அவளை பார்க்காவிட்டால் சிறை அடைந்த பறவை போல துடிப்பேன் .
எப்போதாவது பார்த்தால் ஆனந்தத்தில் தூங்க மாட்டேன் , விண்ணிலே விளையாட நினைப்பேன் ... அவளே அன்பை அதிகம் காட்டி தொந்தரவு செய்யும் போது , ஏன் வருகிறாள் என்று நினைப்பேன் ....

மழையும் காதலியும் ஒன்று

வந்தாலும் பிரச்சனை ;

வராவிட்டாலும் பிரச்சனை !

உங்களை பார்க்காமலே இருந்தால்

வருகிறது தவிப்பு ;

எப்போதாவது பார்த்தால்

வருகிறது களிப்பு ;

நீங்களே அன்பை கொஞ்சம்

அதிகம் காட்டி அனுப்பொழுதும்

தொந்தரவு செய்யும்போது

வருகிறது சலிப்பு !!!

சென்னை மழை இதை தான் , எனக்கு ஞாபகம் ஊட்டியது ... எங்கிருந்தோ , எங்கோ வந்துவிட்டோம் அல்ல ... காதலுக்கும் , கார்மேகதுக்கும் முடிச்சு போட்டுவிட்டேன் அல்லவா ? அது போகட்டும் ...

இனியாவது இந்த சென்னையில் , மழை ஒரு வரமாகட்டும் . மழை காலம் குதூகளம் கொண்டு வரட்டும் . எப்படி ?

Please allocate the government fund to necessary and worth spending things like good drainage system , providing clean water for the people , creating employment oppurtunities for the educated and uneducated people , for people in the panchayats and corporation , men and the women , youth and the old , partymen or an outsider , irrespective of caste , creed and religion . I think spending people's money on free telivision sets , samathuvapurams and cleaning koovam is a havoc thing and can never satisify aam aadmi's problems .

Wednesday, December 16, 2009

maiden blog on Srilankan Tamil war

After a long time I have started blogging because I feel blog is a powerful wield in this cloud computing world to connect to people all around the world . As a literarian , as a politician , as a socialist and finally as an engineer I want to share my views with you all about current events in politics , society , literature ( especially tamil ) , from Copanhagen to Kollywood , hot issues like Srilankan tamil problems to Telangana bifurcation .

என் பார்வையில் சமூகம் , அரசியல் , இலங்கை பிரச்சனை , Copanhagen முதல் kollywood வரை , காதல் , ஒருதலை காமம் , பொருந்தா காமம் , சாதல் என அனைத்தயும் பற்றி கணிப்பொறியுடன் பேசி கொண்டிருக்கும் இவன் கவிதை நடையிலும் , கட்டுரை வடிவிலும் நெகிழ வைக்கும் சில பொய்களாலும் உறைய வைக்கும் சில மெயகளாலும் உங்களோடு பேச வருகிறேன் .

இந்த முதல் பயணத்தில் இலங்கை பிரச்சனையை 'என் பார்வையில்' உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் .

LTTE என்பதை பற்றி நான் எதுவும் இங்கு பேச விரும்பவில்லை . But I want to talk about the Srilankan war on civilans . அப்பாவி மக்களை கொன்று குவித்தது நியாயமற்ற செயல் . அதை வன்மையாக கண்டிக்கும் நான் , ஆயுதத்தால் அணு அளவும் விடை சொல்ல முடியாது என்பதை ஐயம் இல்லாமல் சொல்கிறேன் . 21 ஆம் நூற்றாண்டில் கண்மூடித்தனமான கண்டிக்கத்தக்க செயல் என்றால் அது இந்த போராகத்தான் இருக்கும் . நெல்லில் புல் வளர்ந்து இருக்கிறது என்று இலங்கை அரசாங்கம் கருதி இருந்தால் புல்லை மட்டும் களை எடுத்து இருக்கலாம் . நெல் பயரயும் சேர்த்து புடுங்கி எறிவது நியாயமா ? இதையும் அரசியல் ஆக்கி , இங்கே இருந்து கொண்டு வார்த்தைகளில் அம்பை விட்டு , நேரிலே அன்பை விட்டு வந்தவர்களும் இருக்கின்றனர் . யார் என்று நான் சொல்லி தெரியவைக்க வேண்டியதில்லை . சமீபத்தில் சென்ற M.P கல் குழுவில் இவரும் ஒருவர் .

இனியேனும் உரிமை கொடுத்து , உரக்க குரல் கொடுக்கும் சட்டம் கொடுத்து , கல்வி , சுகாதாரம் , பொருளாதாரம் , அரசியல் என அனைத்திலும் சமமாக நடத்தினால் இன்னுயிர் ஈன்றவர்கள் மறைவில் , கல்லறையில் , மகிழ்ச்சி என்னும் மலர் தோன்றும் . வரும் காலமாவது வாழ்கிறது என்று ... தமிழன் தலை நிமிர்ந்து வாழ்கிறான் என்று ... கண்ணீர் காணமல் போய்விட்டது என்று ...

For some of the readers who do not know tamil , or tamilians who vaguely knows tamil , I am presenting my views in English ... I do not want to discuss anyhting about LTTE , but I strongly condemn this war on Tamil people as war is not a solution to any problem, especially this problem which has been going on for the past 40 years . Please do not make this Srilankan Tamil issue as a political issue as political issues as always will be discussed in the question hour insensibily by scum people and parties . Many of them have taken this a prime issue in election camapaignings and manifestos and tried to hoodwink the people . But Congress won comprehensively in Inida and pretty descent victory for TNC and UPA in Tamilnadu as well . People understood that the campaignings are far from the truth . Please concentrate on various issues that really needs attention and oppose things which are necessary like the sugarcane pricing issue .

யாழ்பாணத் தமிழனுக்காக இந்த தமயன் எழதுவது .....
---------------------------------------------------------------------------------
யாழ்ப்பணத்தில் என்றுமே தீபாவளி
அங்கு வெடிப்பது கன்னி வெடிகள் அல்ல
கண்ணீர் வெடிகள் !!!
மனதில் மறைந்திருக்கும் எரிமலை
ஒரு ஒரு நாளும் வெடிக்கிறது ...
அமெரிக்கா கூட அணுகுண்டு
சோதனை நடத்த தவறலாம்
யாழ்பாணம் என்றும் தவறியதில்லை ...

பச்சை இலைகள் சருகாக ஆகிறது
பால் குடிக்கும் குழந்தை கூட
பையில் கன்னி வெடயுடன் அலைகிறது
ஆள்வதற்காக இருப்பதில்லை நாடு !
வாழ்வதற்காக இருப்பதுதான் நாடு !
முதலிரவில் ஒளி அணைத்து
வாழ்வின் சுழி போடுவார் ...
யாழ்பாணத்தில் அணைக்கப்படும் ஒளி
சுழி போட அல்ல சுடுகாட்டுக்கு போக !!!

திருமணத்தில் யாகம் நடத்தி கண்டோம்
ஆனால் இங்கோ தேகங்கள் யாகமாகிறது ...
யாழ்பாணத்தில் ஒரு குண்டு
துளைக்காத தாளிட்டு
என் தமிழ் மக்களை காப்பாற்று
எம் பெருமானே !

தமிழ் வளர்க்க சங்கம் உண்டு
தமிழனை காக்க சங்கம் உதவாதோ ?
தேசிய மொழி ஆக்க போராடுவீர்
தேம்பி அழும் குளம் காக்க போராடீரோ ?
ஆட்சி மொழி ஆக்க அலைவீர்
இந்த மக்களின் கண்ணீர் காட்சி
மாற்ற மாட்டீரோ ?
தமிழா புறப்படு நம் தமயனை காக்க !
விடியலை கொடுக்க !
அமைதியை நிலை நாட்ட !
ஆயுதத்தை புதைத்திட வருவீர் !!!