Tuesday, October 19, 2010

காலத்தை வென்றவன்

ஏன் வாழக்கையில் இவ்வளவு சோதனைகள் ? இதெல்லாம் எனக்கு மட்டும் தான் நிகழ்கிறதா ? 24 வயதில் 64 வயது முதியவனைப்போல் நோய் பிடித்தும் , பேய் பிடித்தும் கொள்கிறதே ...

கோள்கள் என் வாழ்வில் கோலம் செய்கிறதா ?

பிகரையும் , சிகரையும் ருசிக்க வேண்டிய வயதில் , CT ஸ்கேன் , IVP X-Ray என்று வாழ்க்கை ஓடுகிறதே என்று மன உளைச்சல் அடைந்தேன் .

ஒரு சில கவிதை கூட நொந்து போய் எழுதினேன் .

மருத்துவமனையில்
மணிக்கணக்கில் காத்திருப்பதை விட
mortuary எவ்வளவோ மேல் ...

வீட்டுமனை வாங்கலாம் என
பணம் சேர்த்தேன் ..

மருத்துவமனையிலயே வாழ்பவனுக்கு
வீட்டு மனை ஏன் ?


வியாதி வதைக்கிறதோ ? விதி வதைக்கிறதோ ? சேதம் ஏகத்துக்கு தேகத்துக்கு .
பின் நானே மனதைத் தேற்றிக்கொண்டு சீக்கு இருந்தால் என்ன ? தேக்கு போல மனசும் , ஊக்கு விக்க சில பெருசும் இருந்தா வாழ்க்கைக் கடலில் எதிர் நீச்சல் போட்டு கிட்டே கரையத் தேடுலாம் ...

ஊக்கு விக்க பலர் உயிரோட இருந்தாலும் , உயிர் நீத்த கண்ணதாசன் , இந்த அன்புவின் நேசன் , கவிகளின் ஈசன் வரிகளுக்கு ஈடாகுமா ? படித்த உடன் இரும்பிலே இதயம் முளைத்து , அதில் காந்தம் போல தன்னம்பிக்கையும் , அமைதியும் ஒட்டிக்கொண்டது .

வாழ்க்கைக்கான தேசிய கீதம் இந்த பாடல் . தலை முறைகள் பல தாண்டியும் தேவைப்படும் பொக்கிஷம் இது .

மயக்கமா? கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?...

வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனையிருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி நிலவும்
(மயக்கமா)

ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடு
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு