Wednesday, July 21, 2010

நீ இன்றி நான் இல்லை

ஏ தண்ணிரே !

நீ !
 
மலையில் இருந்து  
விழுந்தால் அருவி !
 
விண்ணில் இருந்து
விழுந்தால் மழை !

ஓட முடியாது
நொண்டி ஆகி விட்டால் குளம்  !
  
கண்ணில் இருந்து  
விழுந்தால் கண்ணீர் !

நாங்கள் குணமாக
நீ கோபமானால் வெந்நீர்  !

வாயுக்குள் போகும் போது
குடிநீர் !
 
சிறிது வய்ற்றுக்குக் கீழ் வந்தால்
சிறுநீர் !

கோவிலுக்குள் கொஞ்சம்
துளசியோடு சேர்ந்தால் தீர்த்தம் !

எல்லோரையும் குளிப்பாட்டும் நீ
அசுத்தமானால் சாக்கடை  !

வாழ்ந்தது போதும்
என கல்லறை போனால் கடல்  !

இப்படி
என்ன பெயரில் இருந்தாலும்
பிறப்பது முதல்
இறப்பது வரை  

நீ இன்றி நான் இல்லை   !!!

Monday, July 19, 2010

ஆண்களிடம் கேட்காதீர்கள்/ சொல்லாதீர்கள் :

பெண்கள் என்பவர்கள் இல்லாது வாழ்வு இல்லை ... காற்று , நீர் , உணவு போன்று இன்றி அமையாதா ஒன்று .. இரண்டறக் கலந்தது . ஆனால் , சில நேரம் உறவுகளில் அவர்கள் உச்சத்துக்கும் வெறுப்பேற்றுவார்கள் .

தினம் 10 நிமிட இன்பத்துக்காக , அவர்களின் 10 மணி நேர புராணத்தை கேக்க வேண்டி இருக்குதே ! என்று கல்யாணம் , காதல் என்ற தெரிந்தே விழும் பள்ளத்தில் விழுந்து விசும்பிக்கொண்டே , ஹ்ம்ம் ,,, என்ன செய்ய ? அப்புடியே ஓட்ட வேண்டிய தான் ... இது என்ன அமெரிக்க வா ... சட்டுன்னு இன்னொருத்தியோட போகன்னு வாழும் ஆண்களை , அம்புகள் எய்து தினமும் கொள்ளும் பெண்களுக்கு ....

ஆண்களிடம் கேட்காதீர்கள்/ சொல்லாதீர்கள் :

காதலி காதலனிடம் ...

'propose ' பண்ணும் போது

ச .. எப்புடி இப்புடி எல்லாம் தோணுது உனக்கு ?

நான் உன்கிட்ட அந்த மாறி பழகி இருந்தேன்னா 'ஐ அம் வெரி சாரி '

'நம்ம ஏன் 'friends' ஆவே இருந்துட கூடாது ?'

நாங்கலாம் orthodox family .. 'தே வில் நெவெர் எவர் அச்செப்ட் திஸ் '

கமிட் ஆகி விட்டால் ..

7 வருடமாக காதலிக்கும் பெண் கம்பெனியில் ஒரு முக்கியமான வேலை செய்து கொண்டு இருக்கும் காதலனிடம் போன் செய்து 'என்ன கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இருக்கா இல்லையா ?'

'இப்பலாம் புளிச்சு போச்சுல ... எல்லாத்தையும் கேட்டாச்சு , பாத்தாச்சுன்னு .. போன் கூட எடுக்க முடியாத அளவுக்கு வேலை ?' பேசிகிற்றுக்கப்பவே 'குடகு' மலையில தண்ணி வர மாறி , கண்ணுலே இருந்து ஊத்து
வேற எடுத்துடும் .

நான் தானே ப்ரொபோஸ் பண்ணினேன் .. அதான் கழுட்டி விட பாக்கற ..

மனைவி கணவனிடம் :


அலுவலகத்துக்கும் பள்ளிக்கும் பறந்து கொண்டிருக்கும் கணவனிடம் , 'இன்னைக்கும் லேட்டா தான் வருவீங்களா ' ?

இந்த மாதமாவது அந்த 'ரெட்டை கோத்து' சங்கிலியை பேங்க் லேருந்து மூட்கலாமா ?

அந்த பயலுக்கு ஏதோ 'கம்ப்யூட்டர்' வேணுமாம் ... கையில காசு இருக்குமா ?

கல்யாணம் ஆனப்ப ரெண்டு படத்துக்கு போனது .. பால போன உன்னை கட்டிகிட்டு , இந்த குடும்பத்துக்கு ஆக்கி போட்டே , என் வாழ்க்கை ஓடிடுச்சு ...

எங்கப்பா சொல்ற மாறி 'டாக்டர்' மாப்புலயே கல்யணம் பண்ணிக்கிட்டு போயிருக்கலாம் ...

உங்க அண்ணனுக்கு குடுத்த காச கேக்க மாட்டியா ? உன்னைய நல்ல இழிச்ச வாயன்னு அரப்பு வெச்சு தேக்குறான் . நான் மட்டும் இல்லன்னா உன் புலப்பா ஏலம் போட்டுருப்பான் உன் அண்ணன் தம்பி எல்லாம் ...

உங்கப்பாவுக்கு விகித சோறு இனிமே நான் போடா முடியாது .. அதும் உங்கப்பா ஏதோ கலெக்டர் வேல வாங்கி வெச்ச மாறி ... எங்கப்பா தான் படிக்க வெச்சாரு , வேல வாங்கி வெச்சார் நு மூச்சுக்கு முன்னூறு தரவ முனுகிரியே . கொண்டு வர்ற 5000 காசையும் 4000 ஆக்கிடு வேணும்னா .. அந்த சரசு கடியில account வெச்சுக்குட்டு வாங்கி திங்க சொல்லு ...

60 ஆயுட்டாலும் ...

31 ஆம் தேதி வரும் 3000 ரூபாய் பென்சன் பணத்துலயும் 'அந்த பென்ஷன் பணத்துல பெரிய பய பேரனுக்கு ஒரு கா பவுன்ல மோதிரம் எடுத்து போடா கூடாது ?'

டிவி இல் நியூஸ் கேட்கும் பொது ...'நீ என்ன நியூஸ் கேட்டு கலெக்டர் ஆவோ , கலைஞர் ஆவோ வா ஆவ போற ? அத நிறுத்திட்டு அந்த தட்டுல ரெண்டு தோசையும் , கொஞ்சம் பழசும் இருக்கு ,,, திண்ணுட்டு மீதம் இருந்தா தண்ணி ஊத்தி வை .. நான் தூங்க போறேன் .'

ஏய்யா இந்த வயசுல உனக்கு என்ன ஏழு , எட்டு பொண்டாட்டி கேக்குதா ? ஊட்டுல டீ போடுறப்ப அந்த 'வேசி' மால்வாயா கடையிலதான் போயி டீ குடிக்கனுமா ? அவ கிட்ட என்ன சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டுருக்க தினம் ..

இந்த நாசமா போனவன் கிட்ட 'உப் உப் உப் ' நு .. ஊதாத ஊதாத நு தலையால அடிசுகிட்டேன் .. குடல் எல்லாம் புன்னா போயி சோறு தண்ணி இல்லாம கிடக்குறான் செத்து தொலையாம ... என் பாவத்த வாங்கி கிட்டு ...செத்து தொலஞ்சா அந்த போஸ்ட் ஆபீஸ் ல இருக்கா பணத்துல எடுத்து போட்டு , கருமாதி பண்ணிட்டு இருக்கறதா பங்கு போட்டு குடுத்து நானும் போயி சேர்ந்துடுவேன் ...

Tuesday, July 13, 2010

சாப்ட்வேர் தாவல்கள்

ஓரிடத்திலே இருந்து விட்டால்
நீ உதவாதவன்
இயலாதவன் என்று
என்னுது இந்த உலகம்

தாவிக்கொண்டே இருந்தால்
தந்து கொண்டே இருக்கிறது
இந்த சாப்ட்வேர் உலகம்

அடுத்த வீட்டு
பழைய சோறு மணக்குது
நம்ம வீட்டு
அய்யர மீனுணா கூட
ரொம்ப கசக்குது

குரங்கிலிருந்து வந்தோம்
அல்லவா ?
அதனால் தான் தாவினால்
தருகிறார்கள் போல ?
தவறினால் மிதிக்கிறார்கள் போல ?

ஊரோட ஒத்து போறேன்
நானும் குரங்கா மாறுரேன் !
அடிக்கடி சீக்கிரம் தாவுறேன் !

Wednesday, July 7, 2010

பொருந்தா காமம்

காதல் , காமம் இது இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்றாலும் , காதலோ  காமமோ  வயதை பார்த்து வருவதல்ல . 40 வயது angelina jolie ஐ 18 வயது பயனுக்கு பிடிக்காதா ? 55 வயது அப்பாவுக்குப் பிடிக்காதா ? 55 வயது அப்பா , 18 வயது பயன் இருவருமே ரசிப்பதில்லையா ? அது ஹாலிவுட் angelina மீது மட்டும்  அல்ல  , திருச்சி பீமா நகரில் இருக்கும் வெண்ணிலாவுக்கும் அது பொருந்தும் . ஆனால் சமுதாயம் , சம்பரதாயம் என்னும் வெளி உலகத்தின் பார்வைக்காக நம் ஆசைகளை , உணர்வுகளை பூட்டி  வைத்துக்கொள்கிறோம்  . இன்னும் உண்மையிலே நெஞ்சில் இருந்து சொல்ல வேண்டுமானால் , ஆண்கள் ஒரு பெண்ணை பார்க்கும்போது வயதை பார்ப்பதில்லை , வனப்பைத்தான் பார்ப்போம் . பெண்களுக்கும் இது பொருந்தும் . Converse is also true in this case .

பல பேர் முதலில் சைட் அடித்தது  , அவன் school டீச்சர் , அல்லது தன அக்காவின் தோழியை ஆக இருக்கும்  . ஆனால்  இதனை  வெளியில் சொல்லி இருக்க மாட்டார்கள் . அடுத்தவர்கள் தம்மை தவறாக எண்ணுவார்கள் என்று . தவறு , சரி என்பதெல்லாம் நமக்கு நாமே பிரித்துக் கொண்டவை , பெயரிட்டுக்கொண்டவை என பலருக்குத் தெரியாது . சிலருக்கு தெரிந்தாலும் மீற முடியாது , தம்மை சுற்றிய மூட உலகத்துக்காக ! இதனை தமிழில் அழகாக பொருந்தா காமம் என்று கூறுகிறார்கள் .

பொருந்தா என்பது என்னைப் பொறுத்தவரை சமுதாயத்துக்கு தான் . மனதுக்கோ , உடலுக்கோ அல்ல , ஊருக்குதான் . நடைமுறையில் இந்த சமுதாயத்தில் அவர்களை திருமணம் செய்து கொண்டு வாழ்வது  சாத்தியமா என்று தெரியவில்லை . அதற்கு கூட சில அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவார்கள் , கலாசார சீர்கேடு என்று . ஆனால் 22 வயது பயன் 36 வயது பெண்ணின் மேலோ , 36 வயது  பெண்  22 வயது  பயன்  மீது  காதலோ  , காமமோ  கொள்வதை  , அந்த  உணர்வுகளை 25 வரிகளில் சொல்லி இருக்கேன்  . 


அடையார் அழகி நீ தான் !
அய்யனாவரம் அழகன் நான் தான் !
பஞ்சு உடம்பு நெஞ்சழுதக்காரி நீ !
கட்டு உடம்பு கள்ளன் நான்

காதல் பன்னா தப்பு இல்ல ..
அப்ப அன்பு கொண்டா குத்தம் இல்ல ..
இதில வெக்க பட ஏதும் இல்ல ..
வயது ஒன்னும் தடை இல்ல ..
பொருந்தா காமம் புதுசு இல்ல ..

சுற்றத்தை எண்ணி
நம் அன்பின்
அர்த்தத்தை வீணாக்கீடாத !
வலிமை இருந்தா
வயச ஏன் பார்க்கணும் ?
மனதில் துணிவு இருந்தா
இந்த உலகை ஏன் நாம்
கண் நோக்கனும் ?

காலையில் பிறந்து
மாலையில் சாகும் பூவுக்கும்
பல நாள் வாழும்
வண்ணத்து பூச்சிக்கும்
காதல் வருவதில்லையா ?

ஊரை பார்க்காதடி நீ
அது வாழ்ந்தா வருத்தப்படும் !
செத்து போனா சிரிக்கும் !
தப்பும் நியாமும்
இங்க ஊருக்கு ஊரு மாறும் !
நீதி வசதிக்கேற்ப மாறும் !
மனதுக்கு பிடிச்சிருந்தா போதும்
திருமணமோ மறுமணமோ
செய்து கொள்ளலாம்
மறுபிறவியா எடுக்க போறோம் ?

பூலோகம் பிடிக்கலைன்னா சொல்லு
என் பொன் நிலவே
வெள்ளியிலே நாம்
வீடு கட்டி வாழலாம் !!!