Wednesday, May 26, 2010

பள்ளத்தில் விழுந்த பச்சிளம் குழந்தை

வெகு நாட்களுக்கு பின்பு எழுதுகிறேன் ... என்னை போன்று குழியில் விழுந்து விட்டோம் என எண்ணிகொண்டிருக்கும் பலருக்காக !

இங்கே இருந்து வெளியே போக முடியுமா என கலக்கத்தில்
இருக்கும் சிலருக்காக !

அப்படியே போக வேண்டும் என்றாலும் எங்கே போவது என வழி தெரியாமல் பாதை மறந்து நிற்கும் ஆடு போல , சாலையின் நடுவே பேருந்து வரும்போது எந்த பக்கம் ஓடுவது என தெரியாமல் குழம்பி நிற்கும் சிறுவர்கள் போல இருக்கும் பலரில் நானும் ஒருவன் .

இந்த பிரதிபலிப்பு , என்னைப் போன்று காசு வரும் என்று எண்ணி சாப்ட்வேர் பாதாளத்தில் காலை விட்டு வெளியேற வழி தெரியாமல் இருப்போரின் பிரதிபலிப்பு ...

இந்த மாயை உலகத்திலே
மனதருவிக் கொண்டே
மாண்டிடுவோமோ ?
என ஒரு கலக்கம் !
வெளியே சென்று
வியாபாரம் செய்தால்
வெற்றி வருமா ?
என ஒரு தயக்கம் !

அரசியல் கடலில் குதித்துல்லோமே
ஒரு காகிதம் போலாவது
மிதப்போமா ? இல்லை
அந்த பெருங்கடலில்
பெருங்காயம் கரைத்தார் போல்
பெயர் தெரியாமல் போவோமோ ?
என ஒரு குழப்பம் !

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்
பெண்மையும் பேனாவும்
எந்த லாபமும் தரா விட்டாலும்
எப்போதும் அதன் மீது
ஒரு மயக்கம் !

பாதை தெரியாது
பள்ளத்தில் விழுந்த
பச்சிளம் குழந்தை போல
விழுந்து விட்டேன் !
இந்த சாப்ட்வேர் பாதாளத்தில்

குழியில் இருந்து
வெளியேற துடிக்கிறேன் !
ஆனால் இன்னும் என்
கூவல்கள் கேக்கவில்லை போல
படைத்தவனுக்கு ! பரம்பொருளுக்கு !

யார் மீது
கோபம் கொள்ள முடியும் ?
பலி போட இயலும் ?
என் தடுமாறும் மனதுக்காக
நானே வருந்துகிறேன் !!!