சில  நேரம்  நாம்  , சில விசயங்களை  ... அது சந்தோசமானாலும் சங்கடமானாலும்  பூட்டி  வைத்து  கொள்ள  வேண்டும்  என்று நினைப்போம்  ..சிலரால்  முடியும்  , பலரால்  முடியாது  . அந்த பலரில் நானும் ஒருவன் . 
திணை  அளவோ  , வான்  அளவோ  ? எழுச்சியோ , வீழ்ச்சியோ ?  சந்தோசமோ , சங்கடமோ ? இதயம்  எனும்  cloak  room il அறைகள் இல்லாமல் , banking locker il இடம்  இல்லாமல்  , நினைவுகளை  சுமைதாங்க  முடியாமல்  இறக்கி வைக்கிறோம் . பின் ஏனடா இறக்கி வைத்தோம் என்று  வருத்தப்படுகிறோம்.
ஒருமுறையோ , பலமுறையோ , சிலரோ பலரோ  இது போன்று உணர்ந்து இருப்பார்கள் ... 
அந்த உணர்வுகளை பேனா மூலம் painting அடித்துள்ளேன்  இந்த blog எனும் சுவரில் .
 
அலை அலையாய் சில 
நினைவுகள் என் நெஞ்சின் 
கரைகளை வந்து 
தட்டும்  போது ...
பெரிய  மதில்களை எழுப்பி 
பூட்டி  வைக்க  நினைக்கிறேன் ! 
ஆனால்  
கொந்தளிப்புகள்  பார்த்து 
பின்  நானே  திறந்து 
விட்டு  தடுமாறுகிறேன் !
 
சுகமாய் இருக்கும் போது 
சந்தோஷ அலைகள் 
பீறிக்கொண்டு வருகிறது ..
சுமைகளால்  தடுமாறும் போது 
சஞ்சல alaigal  
பீறிக்கொண்டு வருகிறது ..
தடுக்கும் போது 
திறந்து விட்டு விடலாமே
என்று நினைக்கிறேன் !
திறந்து விட்டபின் 
தடுத்து  இருக்கலாமே  
என்று நினைக்கிறேன் !
 
மூளையை  பெரியதாய்  
கொடுத்த    இறைவன் 
இதயத்தை  சிறியதாய் 
கொடுத்து  விட்டானே  என்று 
விசனப்பட்டுருக்கிரேன் !  
 
அவ்வளவு  பெரிய  கடலே 
சில  நேரம் 
சுனாமியாய்  உணர்வுகளை  
கொந்தளிக்கும்  போது 
tumbler size   மனம்  
செய்தால்  என்ன ?
என்று  தேற்றிக்கொண்டு 
அழுத்தம்  இல்லாத  மனது  
endra நெகிழ்ச்சியோடும்  
ஆழம்  இல்லாத  மனது 
என்ற  வருத்தத்தோடும் 
இறைவனோ ...
இயற்கையோ  காரணம் 
என்று  பலியை  
அவன்  மேலோ  , 
அது  மேலோ  போட்டு 
என்  உணர்வுகளை 
பூட்டி  வைக்க  முடியாமல்
பேனா மூலம் 
காட்டி கொண்டிருக்கிறேன் ..
சுனாமியாய் எழுத்துக்கள் !!!
Subscribe to:
Post Comments (Atom)
 
Machi.. Awesome.. I would say your best till now..
ReplyDeletenice da
ReplyDelete@ Muthu
ReplyDeleteThanks a lot da machi ... ini innum regular la , nalla worth ah poduraen machi
@ Ravi
ReplyDeleteThanks a lot da Ravi ...