Thursday, June 10, 2010

Census கணக்கு  மக்களுக்கு  தேவையா  ? மரங்களுக்கு  தேவையா  ?

சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு (census ) தேவையா ? இல்லையா ? என்று விவாதம் நடந்து கொண்டிருக்கிறது . இப்படி செய்தால் மொத்தம் உள்ள 250 சாதிகளும் கட்சி தான் துவங்குவார்கள் . எந்த விதமான முன்னேற்றத்துக்கும் இது வழி வகுக்காது . சாதியை அழிக்க போகிறேன் என்று சொல்லி சாதி கட்சியோடு கூட்டணி வைக்கிறார்கள் . நரி ஆட்டை பத்திரமாக பார்த்து கொள்கிறேன் என்று சொல்வது போல் உள்ளது  . பெருகுகின்ற மக்கள் தொகையை சாதி வாரியாக கணக்கு எடுக்க வேண்டுமா என விவாதிப்பதை விட்டு , அழிகின்ற மரங்கள் கணக்கை எடுங்கள் ... மிகவும் அவசியமான ஒன்று .


தங்கம் விலை ஏரிடுச்சுன்னு  
வையகமே  வருந்துது   
ஆனால்
இந்த வறட்சியை பார்த்தால்
தண்ணீர் விலை தங்கத்துக்கு மேலே
தாவிடும்  போலவே  !

பங்குச்சந்தையில்  
தண்ணீரையும் மரங்களையும்
வரிசைப்படுத்தும்  காலம் 
வரும் போலவே  தோழா 
இந்த  கொடுமை  தொடர்ந்தால்  ?

நிலம்  விலை ஏறுதுன்னு
மரத்தை 
இலங்கை தமிழர் போல் சாய்த்து
ரியல் எஸ்டேட்  என்று 
பூதாகர  விலை வைத்து  
பித்தலாட்டம் ஆடிநீரே
என்ன  ஆச்சு  ரியலா ?

பூமித்தாய் தவிக்கிறாள்
தன் மகனை இழந்து !
சூரியன் தன் படைகளோடு
முன்னேறி அருகில் வந்து 
போர்தொடுக்கிறான் !
அக்கினி  சுடர்களை  
ஏவுகனைகளாய் வீசி  !

TV கொடுக்கும்  அரசாங்கம்
ஓட்டுக்கு  பணம் கொடுக்கும்
அரசியல் கட்சிகள்  
இம்முறை மரக்கன்றையும்  
சேர்த்து வழங்குங்கள் ! 

சென்சசில்  இனிமேலும்
பெருகும் மக்கள்
கணக்கு வேண்டாம் !
அழியும் மரங்கள் 
கணக்கு  எடுங்கள் !
சாதி  வாரியாக  கூட எடுங்கள்
award கொடுப்போம்
அதிகம்  வளர்க்கும் சாதிக்கு !!!

2 comments:

  1. Sema machi.. Anda last line punch was too gud..

    ReplyDelete
  2. top gear la pora.. ada mutti modhi nikkaradhuku maram kooda illayae.. ellathayum dhaan ivanunga vetti puttanuvalae..

    ReplyDelete