உன் அழகு என்ன
விலைவாசியா ?
ஏறிக் கொண்டே போகிறது !
ஆனால்
இடையை மட்டும்
இந்தியப் பங்குச் சந்தையில்
போட்டு விட்டாய் போல ! அதான்
குறைந்து கொண்டே போகிறது !
வயசும் அழகும்
euro உம் dollar உம் போல
ஒன்று ஏற மற்றொன்று இறங்கும்
என்று நினைத்தேன் !
ஆனால்
இப்பதான் புரியுது
டெண்டுல்கரும் கிரிக்கெட்டும்
மாதிரின்னு !
முதிர்ச்சி முன்னேற்றுதோ ஒழிய
பின்னேற்ற வில்லை உன்னை !
18 ல் நீ ஒவியம் , 28 ல் நீ
நடந்து போகும்
ஜவுளிக்கடை பொம்மை!
அழகில் தேவதை நீ !
ஆனால்
முடிவெடுக்கும் போது மட்டும் ஏன்
நீதி தேவதை ஆகி விடுகிறாய் !
அவளோ court -ல்
வழக்கறிஞர் சொல்வதைக்
கேட்கிறாள் கண்மூடிக் கொண்டு !
நீயோ உன் உறவினர்
சொல்வதைக் கேட்கிறாய்
அறிவுக் கண்மூடிக் கொண்டு !
நியாயம் உணர்த்த
உண்ணா விரதம் இருக்கலாம்
என நினைத்தேன் !
3 மணி நேரத்தில் வெற்றி கொள்ள
நன் என்ன கலைஞரா ? இல்லை
அரசியல் ஆதாயம் தேட
இலங்கை பிரச்சனையா ?
காதல் பிரச்சனை ஆச்சே !
கை விட்டு விட்டேன் !
தேர்தலைக் கூட
பணத்தால் வெல்ல முடியுது
கருமம் இந்தக் காதலைத் தான்
வெல்ல வழி தெரியல !!!
Monday, April 25, 2011
Monday, February 21, 2011
Poem on water Selected by Vaali
நீ(ர்) இன்றி நான் இல்லை
ஏ நீரே!
நீ !
மலையில் இருந்து
விழுந்தால் நதி !
விண்ணில் இருந்து
விழுந்தால் மழை !
ஓட முடியாது
நொண்டி ஆகி விட்டால் குளம் !
கண்ணில் இருந்து
விழுந்தால் கண்ணீர் !
நாங்கள் குணமாக
நீ கோபமானால் வெந்நீர் !
வாயுக்குள் போகும் போது
குடிநீர் !
சிறிது வய்ற்றுக்குக் கீழ் வந்தால்
சிறுநீர் !
கோவிலுக்குள் கொஞ்சம்
துளசியோடு சேர்ந்தால் தீர்த்தம் !
பலரை குளிப்பாட்டும் நீ
அசுத்தமானால் சாக்கடை !
வாழ்ந்தது போதும்
என கல்லறை போனால் கடல் !
இப்படி என்ன பெயரில் இருந்தாலும்
பிறந்தது முதல்
இறப்பது வரை
நீ(ர்) இன்றி நான் இல்லை !!!
In Hindi/English :
I am not without you!!!
Hey Pani ,
Tu
Parvat se gira tho , nadi
Ambar se gira tho , Baarish
Aankh se gira tho , Rowaai
When you’re handicapped or handcuffed
and cant move .. Lake, dam, pond etc.,
Hame log swasth karnae
Tum kruddh keliyae , garam pani
Mouth pae andhar gaya tho , pina pani
Aur exit gaya tho , Mooth
Mandir me thoda
Tulsi se mila tho , Teerth
Sab co clean naha thae
Tu ganda hua tho , Keechad
When bored of life, commit suicide
By reaching heaven in earth, Sea
In whatever name and form
You are
I am not without you!!!
ஏ நீரே!
நீ !
மலையில் இருந்து
விழுந்தால் நதி !
விண்ணில் இருந்து
விழுந்தால் மழை !
ஓட முடியாது
நொண்டி ஆகி விட்டால் குளம் !
கண்ணில் இருந்து
விழுந்தால் கண்ணீர் !
நாங்கள் குணமாக
நீ கோபமானால் வெந்நீர் !
வாயுக்குள் போகும் போது
குடிநீர் !
சிறிது வய்ற்றுக்குக் கீழ் வந்தால்
சிறுநீர் !
கோவிலுக்குள் கொஞ்சம்
துளசியோடு சேர்ந்தால் தீர்த்தம் !
பலரை குளிப்பாட்டும் நீ
அசுத்தமானால் சாக்கடை !
வாழ்ந்தது போதும்
என கல்லறை போனால் கடல் !
இப்படி என்ன பெயரில் இருந்தாலும்
பிறந்தது முதல்
இறப்பது வரை
நீ(ர்) இன்றி நான் இல்லை !!!
In Hindi/English :
I am not without you!!!
Hey Pani ,
Tu
Parvat se gira tho , nadi
Ambar se gira tho , Baarish
Aankh se gira tho , Rowaai
When you’re handicapped or handcuffed
and cant move .. Lake, dam, pond etc.,
Hame log swasth karnae
Tum kruddh keliyae , garam pani
Mouth pae andhar gaya tho , pina pani
Aur exit gaya tho , Mooth
Mandir me thoda
Tulsi se mila tho , Teerth
Sab co clean naha thae
Tu ganda hua tho , Keechad
When bored of life, commit suicide
By reaching heaven in earth, Sea
In whatever name and form
You are
I am not without you!!!
Wednesday, February 16, 2011
Witty look at a SW guys pity situation

அன்னைக்கு வாலி எழுதின ஒரு பாடல , இன்றைய சாப்ட்வேர் கம்பெனி காரன் நிலமைக்கு தகுந்த மாறி மாத்திருக்கேன் ...
உள்ளே அழுதாலும் உலகை சிரிக்க வைப்பவன் தானே காமெடியன் ... அப்படி ஒரு காமெடியனின் tragedy தான் இந்த modern remake கவிதை ...
ஒரு SW கம்பெனி நினச்சு பாட்டுப் படிச்சேன் !
என்ன நினச்சே நானும் சிரிச்சேன் !
தங்கமே ! ஞானத் தங்கமே !!!
recession நேரத்துல வேலை தேடிப் போனேன் !
VISA reject ஆகுற நேரத்துல
U .S embassy குப் போனேன்!
தப்புக்கணக்கைப் போட்டுத் தவித்தேன்
தங்கமே ! ஞானத் தங்கமே !
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன்
தங்கமே ! ஞானத் தங்கமே !
Monday, January 31, 2011
TWO STATES
ஒரு வட நாட்டு இளைகனுக்கு , தமிழ் நாட்டு பெண்ணின் மீதும் வரும் காதல் தான் 'TWO STATES ' by Chetan baghat ... This two states is the converse of it . A tamil guy falling in love with a Gupta family's Malai Kofta ...
சில நாள் பாத்துருக்கேன் !
பல நாள் காத்துருக்கேன் !
ஒரு வட நாட்டு வாத்துக்காக !
'Mean' minded ah பாக்கல !
வெள்ளை கொக்குக்கு
கொள்ளை போகும்
'மீன்' என்பதால பாத்தேன் !
South இந்தியன்னு பயப்படறாலா ?
இல்ல எங்கயாச்சம் கூட்டிப்போய்
கவுத்துருவேன்னு பயப்படறாலா ?
புரியல ...
September -ல சேர்ந்த
Fresher என்பதைத் தவிர்த்து
வேற ஒன்னும் தெரியல ...
அவளோ Corporate life கு புதுசு
நானோ காதலுக்கும்
இந்த ஊரு இந்தோருக்கும் (Indore ) புதுசு !
ரெண்டு பேரும் முளிக்குறோம்
திரு திருன்னு
media கிட்ட மாட்டுன Radia மாதிரி !
முகத்தைப் பாத்தா சாமியாட்டம்
முழுசா பாத்தா எங்க ஊரு
ஆயிரத்து மாமியாட்டம்
கொஞ்சம் குட்டையா
ஆனாலும் நல்ல கட்டையா இருக்கியே !
யார் நீ ?
Madhuri dixit மாதிரியா ?
Vajapayee எழுதின 'shayari' yaa? ( Shayari - kavithai in hindi )
ஏ ... Gupta வீட்டு Malai kofta
வட துருவம் தென் துருவம்
சேருமான்னு பயப்படாத ...
பொங்கல் , வடை மறந்துட்டேன் !
போகா , ஜிலேபி பழகிகிட்டேன் !
மேலும் hybrid தான்
தருதாம் நல்ல yield
உதாரணம் ,
katrina , samanatha என்று சில வெள்ளாடு !
ஹிந்தி தெரியாததால
முச்சந்தில நிக்குறேன் !
இல்லாட்டி
pulsaril CSC கு வந்து போகும்
South Indian Gulzar என்று காட்டிருப்பேன் !
சென்னைக்கு
என் கூட வருவியோ இல்லையோ
இன்னக்கு
என் பேனாவுக்கு இரையான பேரழகே !
நன்றி ! Danyawaad !
சில நாள் பாத்துருக்கேன் !
பல நாள் காத்துருக்கேன் !
ஒரு வட நாட்டு வாத்துக்காக !
'Mean' minded ah பாக்கல !
வெள்ளை கொக்குக்கு
கொள்ளை போகும்
'மீன்' என்பதால பாத்தேன் !
South இந்தியன்னு பயப்படறாலா ?
இல்ல எங்கயாச்சம் கூட்டிப்போய்
கவுத்துருவேன்னு பயப்படறாலா ?
புரியல ...
September -ல சேர்ந்த
Fresher என்பதைத் தவிர்த்து
வேற ஒன்னும் தெரியல ...
அவளோ Corporate life கு புதுசு
நானோ காதலுக்கும்
இந்த ஊரு இந்தோருக்கும் (Indore ) புதுசு !
ரெண்டு பேரும் முளிக்குறோம்
திரு திருன்னு
media கிட்ட மாட்டுன Radia மாதிரி !
முகத்தைப் பாத்தா சாமியாட்டம்
முழுசா பாத்தா எங்க ஊரு
ஆயிரத்து மாமியாட்டம்
கொஞ்சம் குட்டையா
ஆனாலும் நல்ல கட்டையா இருக்கியே !
யார் நீ ?
Madhuri dixit மாதிரியா ?
Vajapayee எழுதின 'shayari' yaa? ( Shayari - kavithai in hindi )
ஏ ... Gupta வீட்டு Malai kofta
வட துருவம் தென் துருவம்
சேருமான்னு பயப்படாத ...
பொங்கல் , வடை மறந்துட்டேன் !
போகா , ஜிலேபி பழகிகிட்டேன் !
மேலும் hybrid தான்
தருதாம் நல்ல yield
உதாரணம் ,
katrina , samanatha என்று சில வெள்ளாடு !
ஹிந்தி தெரியாததால
முச்சந்தில நிக்குறேன் !
இல்லாட்டி
pulsaril CSC கு வந்து போகும்
South Indian Gulzar என்று காட்டிருப்பேன் !
சென்னைக்கு
என் கூட வருவியோ இல்லையோ
இன்னக்கு
என் பேனாவுக்கு இரையான பேரழகே !
நன்றி ! Danyawaad !
Tuesday, December 21, 2010
அப்பா
பொதிகை தொலைக்காட்சியின் ஒரு நிகழ்சிக்காக நன் எழுதிய கவிதை ... அப்பா என்னும் தலைப்பிலே பத்து வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றார்கள் . படித்து உங்கள் விமர்சனங்களை அளியுங்கள் . 'A ' வாக இருக்கிறது என்று சொல்லாதீர்கள் :-) . A1 ஆ௧ இருக்கிறதா என்று சொல்லுங்கள் ...
அப்பா
'விந்தை'க் கொடுத்ததாலே மட்டும் நீ தந்தை அல்ல !
என்னை விந்தை ஆக்க படிக்கச் செய்தாய் !
சில நேரம் அடிக்கவும் செய்தாய் !
எனக்கு சிறு காய்ச்சல் என்றால் கூட துடி துடித்தாய் !
உன் வயிறும் மனமும் வாடி இருந்தும்
என்னை சிரிக்க வைக்க நடிக்கவும் செய்தாய் !
ஒரு பெண்ணால் பித்து பிடித்து சொத்து கேட்டு ,
Initial கொடுத்த உனக்கே இம்சை கொடுத்தேன் !
ஆனாலும் எனக்காக அழுது ஆராதிக்கும் நீ
என்றும் என் God , father => God father !!!
அப்பா
'விந்தை'க் கொடுத்ததாலே மட்டும் நீ தந்தை அல்ல !
என்னை விந்தை ஆக்க படிக்கச் செய்தாய் !
சில நேரம் அடிக்கவும் செய்தாய் !
எனக்கு சிறு காய்ச்சல் என்றால் கூட துடி துடித்தாய் !
உன் வயிறும் மனமும் வாடி இருந்தும்
என்னை சிரிக்க வைக்க நடிக்கவும் செய்தாய் !
ஒரு பெண்ணால் பித்து பிடித்து சொத்து கேட்டு ,
Initial கொடுத்த உனக்கே இம்சை கொடுத்தேன் !
ஆனாலும் எனக்காக அழுது ஆராதிக்கும் நீ
என்றும் என் God , father => God father !!!
Tuesday, November 30, 2010
வருணனை ஆனால் உண்மை
பர்தா போட்டு எதிரே ஒரு முஸ்லிம் நங்கை வந்தாள் .. அந்த வெள்ளை உடம்பில் கருப்பாக இருந்தது அந்த இமை மட்டும் தான் . கூந்தல் இன்னும் கூட கருப்பாக இருந்திருக்கலாம் . ஆனால் அந்த கருப்பு வானம் மூடி விட்டது . கண்கள் சொக்கியது . பாதி காரணம் 4:30 மணி அதிகாலை என்பதால் . மீதி காரணம் அவளால் .. காலேஜ் ID கார்டு , கையில் இன்ஜினியரிங் புக் பார்த்தேன் .. அவளோடு ஆட்டோவில் செல்லும் போது ஒரு கவிதை தோன்றியது .
1 கருப்பு wallet
2 இன்ஜினியரிங் புக் வச்சுகிட்டு
3 சக்கர வண்டியில்
4 வருட பட்டம் வாங்க
5 அடி பட்டாம் பூச்சி
பர்தா போட்டு செல்கிறது ...
1 கருப்பு wallet
2 இன்ஜினியரிங் புக் வச்சுகிட்டு
3 சக்கர வண்டியில்
4 வருட பட்டம் வாங்க
5 அடி பட்டாம் பூச்சி
பர்தா போட்டு செல்கிறது ...
Tuesday, October 19, 2010
காலத்தை வென்றவன்
ஏன் வாழக்கையில் இவ்வளவு சோதனைகள் ? இதெல்லாம் எனக்கு மட்டும் தான் நிகழ்கிறதா ? 24 வயதில் 64 வயது முதியவனைப்போல் நோய் பிடித்தும் , பேய் பிடித்தும் கொள்கிறதே ...
கோள்கள் என் வாழ்வில் கோலம் செய்கிறதா ?
பிகரையும் , சிகரையும் ருசிக்க வேண்டிய வயதில் , CT ஸ்கேன் , IVP X-Ray என்று வாழ்க்கை ஓடுகிறதே என்று மன உளைச்சல் அடைந்தேன் .
ஒரு சில கவிதை கூட நொந்து போய் எழுதினேன் .
மருத்துவமனையில்
மணிக்கணக்கில் காத்திருப்பதை விட
mortuary எவ்வளவோ மேல் ...
வீட்டுமனை வாங்கலாம் என
பணம் சேர்த்தேன் ..
மருத்துவமனையிலயே வாழ்பவனுக்கு
வீட்டு மனை ஏன் ?
வியாதி வதைக்கிறதோ ? விதி வதைக்கிறதோ ? சேதம் ஏகத்துக்கு தேகத்துக்கு .
பின் நானே மனதைத் தேற்றிக்கொண்டு சீக்கு இருந்தால் என்ன ? தேக்கு போல மனசும் , ஊக்கு விக்க சில பெருசும் இருந்தா வாழ்க்கைக் கடலில் எதிர் நீச்சல் போட்டு கிட்டே கரையத் தேடுலாம் ...
ஊக்கு விக்க பலர் உயிரோட இருந்தாலும் , உயிர் நீத்த கண்ணதாசன் , இந்த அன்புவின் நேசன் , கவிகளின் ஈசன் வரிகளுக்கு ஈடாகுமா ? படித்த உடன் இரும்பிலே இதயம் முளைத்து , அதில் காந்தம் போல தன்னம்பிக்கையும் , அமைதியும் ஒட்டிக்கொண்டது .
வாழ்க்கைக்கான தேசிய கீதம் இந்த பாடல் . தலை முறைகள் பல தாண்டியும் தேவைப்படும் பொக்கிஷம் இது .
மயக்கமா? கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?...
வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனையிருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி நிலவும்
(மயக்கமா)
ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடு
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
கோள்கள் என் வாழ்வில் கோலம் செய்கிறதா ?
பிகரையும் , சிகரையும் ருசிக்க வேண்டிய வயதில் , CT ஸ்கேன் , IVP X-Ray என்று வாழ்க்கை ஓடுகிறதே என்று மன உளைச்சல் அடைந்தேன் .
ஒரு சில கவிதை கூட நொந்து போய் எழுதினேன் .
மருத்துவமனையில்
மணிக்கணக்கில் காத்திருப்பதை விட
mortuary எவ்வளவோ மேல் ...
வீட்டுமனை வாங்கலாம் என
பணம் சேர்த்தேன் ..
மருத்துவமனையிலயே வாழ்பவனுக்கு
வீட்டு மனை ஏன் ?
வியாதி வதைக்கிறதோ ? விதி வதைக்கிறதோ ? சேதம் ஏகத்துக்கு தேகத்துக்கு .
பின் நானே மனதைத் தேற்றிக்கொண்டு சீக்கு இருந்தால் என்ன ? தேக்கு போல மனசும் , ஊக்கு விக்க சில பெருசும் இருந்தா வாழ்க்கைக் கடலில் எதிர் நீச்சல் போட்டு கிட்டே கரையத் தேடுலாம் ...
ஊக்கு விக்க பலர் உயிரோட இருந்தாலும் , உயிர் நீத்த கண்ணதாசன் , இந்த அன்புவின் நேசன் , கவிகளின் ஈசன் வரிகளுக்கு ஈடாகுமா ? படித்த உடன் இரும்பிலே இதயம் முளைத்து , அதில் காந்தம் போல தன்னம்பிக்கையும் , அமைதியும் ஒட்டிக்கொண்டது .
வாழ்க்கைக்கான தேசிய கீதம் இந்த பாடல் . தலை முறைகள் பல தாண்டியும் தேவைப்படும் பொக்கிஷம் இது .
மயக்கமா? கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?...
வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனையிருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி நிலவும்
(மயக்கமா)
ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடு
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
Subscribe to:
Posts (Atom)