Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Monday, April 25, 2011

என்ன செய்ய ?

உன் அழகு என்ன
விலைவாசியா ?
ஏறிக் கொண்டே போகிறது !

ஆனால்
இடையை மட்டும்
இந்தியப் பங்குச் சந்தையில்
போட்டு விட்டாய் போல ! அதான்
குறைந்து கொண்டே போகிறது !

வயசும் அழகும்
euro உம் dollar உம் போல
ஒன்று ஏற மற்றொன்று இறங்கும்
என்று நினைத்தேன் !

ஆனால்
இப்பதான் புரியுது
டெண்டுல்கரும் கிரிக்கெட்டும்
மாதிரின்னு !

முதிர்ச்சி முன்னேற்றுதோ ஒழிய
பின்னேற்ற வில்லை உன்னை !
18 ல் நீ ஒவியம் , 28 ல் நீ
நடந்து போகும்
ஜவுளிக்கடை பொம்மை!

அழகில் தேவதை நீ !
ஆனால்
முடிவெடுக்கும் போது மட்டும் ஏன்
நீதி தேவதை ஆகி விடுகிறாய் !

அவளோ court -ல்
வழக்கறிஞர் சொல்வதைக்
கேட்கிறாள் கண்மூடிக் கொண்டு !
நீயோ உன் உறவினர்
சொல்வதைக் கேட்கிறாய்
அறிவுக் கண்மூடிக் கொண்டு !

நியாயம் உணர்த்த
உண்ணா விரதம் இருக்கலாம்
என நினைத்தேன் !

3 மணி நேரத்தில் வெற்றி கொள்ள
நன் என்ன கலைஞரா ? இல்லை
அரசியல் ஆதாயம் தேட
இலங்கை பிரச்சனையா ?
காதல் பிரச்சனை ஆச்சே !
கை விட்டு விட்டேன் !

தேர்தலைக் கூட
பணத்தால் வெல்ல முடியுது
கருமம் இந்தக் காதலைத் தான்
வெல்ல வழி தெரியல !!!