Wednesday, April 27, 2011

சாமிக்கே விபூதி ! கலைஞருக்கே கடிதம் !

கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரமா ?

இலங்கையில் போர் முடிந்து , தமிழ் வேர் அறுந்து போய் எவ்வளோ நாள் ஆச்சு . இன்று கருணாநிதி உயர் நிலை செயல் மட்டகுழுவைக் கூட்டி , ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும் என்கிறார் . கனிமொழி தண்டிக்கப்பட்டால் , குடும்பத்தினர் புரிந்த குற்றத்தை CBI தட்டிக் கேட்டால் காங்கிரசுக்கு எதிராக என்ன செய்யலாம் எனப் பார்த்து , இலங்கைப் பிரச்சனையைக் கையில் எடுப்பது கை வந்த கலையாய்ப் போயிற்று உங்களுக்கு . "மனசாட்சி உறங்கும் போது தான் மனக்குரங்கு வெளியே வரும் என்று சொன்னவர் நீங்கள் தான்" .

உங்கள் மனசாட்சி எங்கே போச்சு ?

உங்களுக்கு டாக்டர் பட்டம் தரக்கூடாது என்று போராடியதற்காக
,அப்பாவி அண்ணாமலைப் பல்கலைக்கழக இளைஞர்களைக் கொன்றபோது உறங்க வில்லை ?
காமராஜர் நிற்கும் இடத்தில் யாரையும் நிறுத்த வேண்டாம் என்று அண்ணா சொல்லியும் , சீனிவாசனை நிறுத்தி பொய்ப் பிரச்சாரம் செய்த போது மனசாட்சி உறங்க வில்லை ?

M.G.R ஐ வெளியேற்றிய போது மனசாட்சி உறங்க வில்லை ?

வைகோவின் வளர்ச்சி ஸ்டாலினுக்குத் தளர்ச்சி என்று கருதி , கட்சியை விட்டு நீக்க நீங்கள் பண்ணிய திரைக்கதை , நாடகம் பராசக்தியை விடப் போற்றிப் புகழ வேண்டியது ...

சர்க்காரியா commision உங்களை 'Scientific robber ' என்ற போது பெருமைப் பட்டீர்களா ? இல்லை அண்ணாவின் தம்பிக்கு இப்படி ஒரு பெயரா ? பெரியாரின் மாணவனுக்கு இப்படி ஒரு பெயரா என்று வருத்தப்படீர்களா ?

Jain commission(Commsion formed to investigate Rajiv's assasination)இல் உங்கள் பெயரும் , தி .மு.க வின் பெயரும் இருந்ததே .. இருந்தும் அரசியலுக்காக அந்த சோனியா அம்மையார் கூட்டணி வைக்கக் காரணம் ஜெயலலிதா ஒரு பிசாசு , அது பிராண்டி விடும் . நீங்களோ சுரண்ட மட்டும் தான் செய்வீர்கள் என்று தெரிந்துதான்.

எல்லா கட்சிகளும் ஊழல் செய்கிறார்கள் ... ஆனால் உங்கள் அளவுக்கு காஞ்ச மாடு கம்புல புகுந்த மாறி இல்லை .

ஸ்டாலின் துணை முதல்வர் ( D.M.K பொருளாளர் ) , அழகிரி (Cabinet minister மற்றும் தென் மண்டல அமைப்பாளர் ) ,கனிமொழி (Rajya shaba M.P) , தயாநிதி (Cabinet Minister ) ...

அண்ணா வளர்த்த மரமான தி.மு.க , திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து, திருக்குவளை முத்துவேலர் மகன் கருணாநிதி என்று ஆயுடுச்சு ... D.M.K => Delhi money for Karunanidhi ஆக இருக்கும் வரை அமைதி ஆக இருப்பீங்க.இல்லையின்னா இலங்கைத் தமிழன் தெரிகிறான் .

உங்கள் அரசியல் ஆடுகளத்தில் இலங்கைத் தமிழன் விளையாட்டுப் பொருள் .
Politics is the art of possible என்று சொல்வார்கள் ... நீங்கள் கட்சிக்கான possibility - ஐ பார்க்காமல் குடும்பத்துக்கான possibility - ஐ மட்டுமே பார்க்கிறீர்கள் . அது சரி , கழகம் குடும்பமாய் போன பின்னே அதைத் தானே பார்க்கணும் !

ராஜபக்சே கூட நேரா நின்னு குத்துறான் . நீங்கள் ,திருமா , ராமதாஸ் , ஜெயலலிதா , வீரம் இல்லாத வீரமணி , சாகும் தமிழ் நாடு காங்கிரசை சக்கரம் ஏற்றிக் கொன்று கொண்டிருக்கும் தகரமான தங்கபாலு எல்லாம் மறைந்து நின்று அடிக்காதீர்கள் . அவர்கள் பாவம் . அவர்கள் கல்லறையிலாவது நிம்மதியாய் உறங்கட்டும் .

To Rajapakse:

பருத்திக் காட்டில் முளைச்ச
கோரையும் , பூண்டையும்
கொத்தி எடுப்பத போல
கொத்துக் கொத்தா
தமிழ் இனத்தைக் கொத்தி எடுத்த
கொலைகாரனே !

போர் என்னும் பேருல
இலங்கையில் தமிழ்
வேர் அறுத்து போட்டியே
புத்த மதம் இதைத் தான்
சொல்லிக் குடுத்துதா
புத்தி அற்றவனே!

ஆசை தானே வேண்டாம்னு
சொன்னாங்க
கொலைவெறி ஒன்னும்
குத்தம் இல்லன்னு சொல்லுறியா?

காலம் காலமா
கதறிக் கேக்குற ஒரே சொல் ஈழம் ...
அந்த ஈழத்தைக் கொடுக்காம
போனதா கூட காலம் மண்ணிக்கும் ...
நீ செய்த ஈனத்தனமான செயலை ?

நீ ஒரு பக்கம் .....

Tiger -ஐ காப்பாத்தத் துடிக்கும்
NDTV , Times now லாம்
தமிழனைக் காக்க முன்வர வில்லை !

U.N , U.S , U.K என பல
United லாம் unite ஆயுருந்தா
தடுத்துருக்கலாமே !

என்னை தேசமுன்னா முண்டி அடிச்சு
FBI போயிருக்கும் கைவசப்படுத்த ...
அது கண்ணீர் தேசம் ஆச்சே !

நீங்க எல்லாம்
LTTE கு தான் தடை போட்டீங்களா ?
இல்லை மனசாட்சிக்கும் சேர்த்து
தடை போட்டுட்டீங்களா ?

அது சரி ...
எட்டிப் பார்க்கும் தூரத்தில் இருக்கும்
எங்க ஊரு காரனே
எவன் வீடோ எரியுதுன்னு இருந்தப்ப
நீ என்ன பண்ணுவ ?

புலிகளைக் கொல்ல
பூஞ்சோலையை அழிச்ச உனக்கு
தூது போனார் பலர் !
துணை நின்றார் சிலர் !

cancerous cells லாம்
dangerous ஆன உனக்கு
ஒன்னும் பெருசு இல்ல !
கடவுள் என்னும் judge இருந்தா
நரகம் என்ற cell ல உன்னை தள்ளி
வட்டிக் கடன் தீர்க்கட்டும் !!!

Monday, April 25, 2011

என்ன செய்ய ?

உன் அழகு என்ன
விலைவாசியா ?
ஏறிக் கொண்டே போகிறது !

ஆனால்
இடையை மட்டும்
இந்தியப் பங்குச் சந்தையில்
போட்டு விட்டாய் போல ! அதான்
குறைந்து கொண்டே போகிறது !

வயசும் அழகும்
euro உம் dollar உம் போல
ஒன்று ஏற மற்றொன்று இறங்கும்
என்று நினைத்தேன் !

ஆனால்
இப்பதான் புரியுது
டெண்டுல்கரும் கிரிக்கெட்டும்
மாதிரின்னு !

முதிர்ச்சி முன்னேற்றுதோ ஒழிய
பின்னேற்ற வில்லை உன்னை !
18 ல் நீ ஒவியம் , 28 ல் நீ
நடந்து போகும்
ஜவுளிக்கடை பொம்மை!

அழகில் தேவதை நீ !
ஆனால்
முடிவெடுக்கும் போது மட்டும் ஏன்
நீதி தேவதை ஆகி விடுகிறாய் !

அவளோ court -ல்
வழக்கறிஞர் சொல்வதைக்
கேட்கிறாள் கண்மூடிக் கொண்டு !
நீயோ உன் உறவினர்
சொல்வதைக் கேட்கிறாய்
அறிவுக் கண்மூடிக் கொண்டு !

நியாயம் உணர்த்த
உண்ணா விரதம் இருக்கலாம்
என நினைத்தேன் !

3 மணி நேரத்தில் வெற்றி கொள்ள
நன் என்ன கலைஞரா ? இல்லை
அரசியல் ஆதாயம் தேட
இலங்கை பிரச்சனையா ?
காதல் பிரச்சனை ஆச்சே !
கை விட்டு விட்டேன் !

தேர்தலைக் கூட
பணத்தால் வெல்ல முடியுது
கருமம் இந்தக் காதலைத் தான்
வெல்ல வழி தெரியல !!!

Monday, February 21, 2011

Poem on water Selected by Vaali

நீ(ர்) இன்றி நான் இல்லை

ஏ நீரே!

நீ !

மலையில் இருந்து
விழுந்தால் நதி !

விண்ணில் இருந்து
விழுந்தால் மழை !

ஓட முடியாது
நொண்டி ஆகி விட்டால் குளம் !

கண்ணில் இருந்து
விழுந்தால் கண்ணீர் !

நாங்கள் குணமாக
நீ கோபமானால் வெந்நீர் !

வாயுக்குள் போகும் போது
குடிநீர் !

சிறிது வய்ற்றுக்குக் கீழ் வந்தால்
சிறுநீர் !

கோவிலுக்குள் கொஞ்சம்
துளசியோடு சேர்ந்தால் தீர்த்தம் !

பலரை குளிப்பாட்டும் நீ
அசுத்தமானால் சாக்கடை !

வாழ்ந்தது போதும்
என கல்லறை போனால் கடல் !

இப்படி என்ன பெயரில் இருந்தாலும்
பிறந்தது முதல்
இறப்பது வரை
நீ(ர்) இன்றி நான் இல்லை !!!


In Hindi/English :

I am not without you!!!

Hey Pani ,

Tu

Parvat se gira tho , nadi
Ambar se gira tho , Baarish
Aankh se gira tho , Rowaai

When you’re handicapped or handcuffed
and cant move .. Lake, dam, pond etc.,

Hame log swasth karnae
Tum kruddh keliyae , garam pani

Mouth pae andhar gaya tho , pina pani
Aur exit gaya tho , Mooth

Mandir me thoda
Tulsi se mila tho , Teerth

Sab co clean naha thae
Tu ganda hua tho , Keechad

When bored of life, commit suicide
By reaching heaven in earth, Sea

In whatever name and form
You are
I am not without you!!!

Wednesday, February 16, 2011

Witty look at a SW guys pity situation



அன்னைக்கு வாலி எழுதின ஒரு பாடல , இன்றைய சாப்ட்வேர் கம்பெனி காரன் நிலமைக்கு தகுந்த மாறி மாத்திருக்கேன் ...

உள்ளே அழுதாலும் உலகை சிரிக்க வைப்பவன் தானே காமெடியன் ... அப்படி ஒரு காமெடியனின் tragedy தான் இந்த modern remake கவிதை ...

ஒரு SW கம்பெனி நினச்சு பாட்டுப் படிச்சேன் !
என்ன நினச்சே நானும் சிரிச்சேன் !
தங்கமே ! ஞானத் தங்கமே !!!

recession நேரத்துல வேலை தேடிப் போனேன் !
VISA reject ஆகுற நேரத்துல
U .S embassy குப் போனேன்!

தப்புக்கணக்கைப் போட்டுத் தவித்தேன்
தங்கமே ! ஞானத் தங்கமே !

பட்ட பிறகே புத்தி தெளிந்தேன்
தங்கமே ! ஞானத் தங்கமே !

Monday, January 31, 2011

TWO STATES

ஒரு வட நாட்டு இளைகனுக்கு , தமிழ் நாட்டு பெண்ணின் மீதும் வரும் காதல் தான் 'TWO STATES ' by Chetan baghat ... This two states is the converse of it . A tamil guy falling in love with a Gupta family's Malai Kofta ...


சில நாள் பாத்துருக்கேன் !
பல நாள் காத்துருக்கேன் !
ஒரு வட  நாட்டு வாத்துக்காக ! 

'Mean' minded  ah  பாக்கல !
வெள்ளை கொக்குக்கு
கொள்ளை போகும்
'மீன்' என்பதால பாத்தேன் !

South  இந்தியன்னு பயப்படறாலா ?  
இல்ல எங்கயாச்சம்  கூட்டிப்போய்
கவுத்துருவேன்னு  பயப்படறாலா  ?  

புரியல ...
September -ல சேர்ந்த 
Fresher என்பதைத் தவிர்த்து 
வேற ஒன்னும் தெரியல  ...

அவளோ Corporate life  கு புதுசு 
நானோ காதலுக்கும் 
இந்த ஊரு இந்தோருக்கும் (Indore )  புதுசு !
ரெண்டு பேரும் முளிக்குறோம் 
திரு திருன்னு  
media கிட்ட மாட்டுன Radia மாதிரி !

முகத்தைப் பாத்தா சாமியாட்டம்
முழுசா பாத்தா எங்க ஊரு
ஆயிரத்து மாமியாட்டம்
கொஞ்சம் குட்டையா
ஆனாலும் நல்ல கட்டையா இருக்கியே !

யார் நீ ?
Madhuri dixit  மாதிரியா ?
Vajapayee எழுதின 'shayari' yaa? ( Shayari - kavithai in hindi )

ஏ ... Gupta வீட்டு Malai kofta
வட துருவம் தென் துருவம்
சேருமான்னு பயப்படாத ...
பொங்கல் , வடை மறந்துட்டேன் ! 
போகா , ஜிலேபி பழகிகிட்டேன் !

மேலும் hybrid தான்
தருதாம் நல்ல yield
உதாரணம் ,
katrina , samanatha என்று சில வெள்ளாடு !

ஹிந்தி தெரியாததால 
முச்சந்தில நிக்குறேன் !
இல்லாட்டி
pulsaril CSC கு வந்து போகும்  
South  Indian Gulzar  என்று  காட்டிருப்பேன் !

சென்னைக்கு
என் கூட வருவியோ இல்லையோ
இன்னக்கு
என் பேனாவுக்கு இரையான பேரழகே !
நன்றி ! Danyawaad  !

Tuesday, December 21, 2010

அப்பா

பொதிகை தொலைக்காட்சியின் ஒரு நிகழ்சிக்காக நன் எழுதிய கவிதை ... அப்பா என்னும் தலைப்பிலே பத்து வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றார்கள் . படித்து உங்கள் விமர்சனங்களை அளியுங்கள் . 'A ' வாக இருக்கிறது என்று சொல்லாதீர்கள் :-) . A1 ஆ௧ இருக்கிறதா என்று சொல்லுங்கள் ... 

அப்பா

'விந்தை'க் கொடுத்ததாலே மட்டும் நீ தந்தை அல்ல !
என்னை விந்தை ஆக்க படிக்கச் செய்தாய் !
சில நேரம் அடிக்கவும் செய்தாய் !

எனக்கு சிறு காய்ச்சல் என்றால் கூட துடி துடித்தாய் !
உன் வயிறும் மனமும் வாடி இருந்தும்
என்னை சிரிக்க வைக்க நடிக்கவும் செய்தாய் !

ஒரு பெண்ணால் பித்து பிடித்து சொத்து கேட்டு ,
Initial கொடுத்த உனக்கே இம்சை கொடுத்தேன் !
ஆனாலும் எனக்காக அழுது ஆராதிக்கும் நீ
என்றும் என் God , father => God father !!!

Tuesday, November 30, 2010

வருணனை ஆனால் உண்மை

பர்தா போட்டு எதிரே ஒரு முஸ்லிம் நங்கை வந்தாள் .. அந்த வெள்ளை உடம்பில் கருப்பாக இருந்தது அந்த இமை மட்டும் தான் . கூந்தல் இன்னும் கூட கருப்பாக இருந்திருக்கலாம் . ஆனால் அந்த கருப்பு வானம் மூடி விட்டது . கண்கள் சொக்கியது . பாதி காரணம் 4:30 மணி அதிகாலை என்பதால் . மீதி காரணம் அவளால் .. காலேஜ் ID கார்டு , கையில் இன்ஜினியரிங் புக் பார்த்தேன் .. அவளோடு ஆட்டோவில் செல்லும் போது ஒரு கவிதை தோன்றியது .
 
1 கருப்பு wallet
2 இன்ஜினியரிங் புக் வச்சுகிட்டு 
3 சக்கர வண்டியில்  
4 வருட பட்டம் வாங்க
5 அடி பட்டாம் பூச்சி
பர்தா போட்டு செல்கிறது ...