சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு (census ) தேவையா ? இல்லையா ? என்று விவாதம் நடந்து கொண்டிருக்கிறது . இப்படி செய்தால் மொத்தம் உள்ள 250 சாதிகளும் கட்சி தான் துவங்குவார்கள் . எந்த விதமான முன்னேற்றத்துக்கும் இது வழி வகுக்காது . சாதியை அழிக்க போகிறேன் என்று சொல்லி சாதி கட்சியோடு கூட்டணி வைக்கிறார்கள் . நரி ஆட்டை பத்திரமாக பார்த்து கொள்கிறேன் என்று சொல்வது போல் உள்ளது . பெருகுகின்ற மக்கள் தொகையை சாதி வாரியாக கணக்கு எடுக்க வேண்டுமா என விவாதிப்பதை விட்டு , அழிகின்ற மரங்கள் கணக்கை எடுங்கள் ... மிகவும் அவசியமான ஒன்று .
தங்கம் விலை ஏரிடுச்சுன்னு
வையகமே வருந்துது
ஆனால்
இந்த வறட்சியை பார்த்தால்
தண்ணீர் விலை தங்கத்துக்கு மேலே
தாவிடும் போலவே !
பங்குச்சந்தையில்
தண்ணீரையும் மரங்களையும்
வரிசைப்படுத்தும் காலம்
வரும் போலவே தோழா
இந்த கொடுமை தொடர்ந்தால் ?
நிலம் விலை ஏறுதுன்னு
மரத்தை
இலங்கை தமிழர் போல் சாய்த்து
ரியல் எஸ்டேட் என்று
பூதாகர விலை வைத்து
பித்தலாட்டம் ஆடிநீரே
என்ன ஆச்சு ரியலா ?
பூமித்தாய் தவிக்கிறாள்
தன் மகனை இழந்து !
சூரியன் தன் படைகளோடு
முன்னேறி அருகில் வந்து
போர்தொடுக்கிறான் !
அக்கினி சுடர்களை
ஏவுகனைகளாய் வீசி !
TV கொடுக்கும் அரசாங்கம்
ஓட்டுக்கு பணம் கொடுக்கும்
அரசியல் கட்சிகள்
இம்முறை மரக்கன்றையும்
சேர்த்து வழங்குங்கள் !
சென்சசில் இனிமேலும்
பெருகும் மக்கள்
கணக்கு வேண்டாம் !
அழியும் மரங்கள்
கணக்கு எடுங்கள் !
சாதி வாரியாக கூட எடுங்கள்
award கொடுப்போம்
அதிகம் வளர்க்கும் சாதிக்கு !!!
Showing posts with label census அரசியல். Show all posts
Showing posts with label census அரசியல். Show all posts
Thursday, June 10, 2010
Subscribe to:
Posts (Atom)