ஏ தண்ணிரே !
நீ !
மலையில் இருந்து
விழுந்தால் அருவி !
விண்ணில் இருந்து
விழுந்தால் மழை !
ஓட முடியாது
நொண்டி ஆகி விட்டால் குளம் !
கண்ணில் இருந்து
விழுந்தால் கண்ணீர் !
நாங்கள் குணமாக
நீ கோபமானால் வெந்நீர் !
வாயுக்குள் போகும் போது
குடிநீர் !
சிறிது வய்ற்றுக்குக் கீழ் வந்தால்
சிறுநீர் !
கோவிலுக்குள் கொஞ்சம்
துளசியோடு சேர்ந்தால் தீர்த்தம் !
எல்லோரையும் குளிப்பாட்டும் நீ
அசுத்தமானால் சாக்கடை !
வாழ்ந்தது போதும்
என கல்லறை போனால் கடல் !
இப்படி
என்ன பெயரில் இருந்தாலும்
பிறப்பது முதல்
இறப்பது வரை
நீ இன்றி நான் இல்லை !!!
Showing posts with label தண்ணீர். Show all posts
Showing posts with label தண்ணீர். Show all posts
Wednesday, July 21, 2010
Subscribe to:
Posts (Atom)