Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

Monday, June 14, 2010

சென்னை என் பார்வையில் ...





தேனீக்கள் மொய்த்திடுது எங்கு பார்த்தாலும்
ஆனால் வண்ண மலர்கள் இல்லை சுற்றிலும்
கோமானும் சீமானும் , கூலியும் பணக்காரனும்
சாப்பாட்டை சைக்கிள் carrier -ல்  வைத்திருப்பவனும்
சான்ட்ரோவில் போகும்  சாப்ட்வேர்  வர்க்கமும் !
கொசுக்கூட்டத்தோடு  குடிசையில் வாழ்பவனும்  
கோடி சம்பாரிக்கும் வியாபார காந்தமும் !
கருப்பு பணம் கத்தை கத்தையாய் வைத்து
வாழ்க்கையில் நடிக்கும் அரசியல் வாதியும்  
வண்ணத்திரையில்  நடிக்கும் கலைஞனும் !

10 அடிக்கு ஒரு bridge , சந்துக்கு  சந்து
சாப்ட்வேர் கம்பெனி ,   சாலை ஓரமெல்லாம்
குஷ்பூ இட்லியும் , கூவத்து 
சந்தனமும்  மணக்குது  ...
ஆட்குக்கால்  சூப்பும்  , ஐயிர  மீன் வருவலும்
ஆளையே தூக்குது  …
அதெல்லாம் விட தமிழ் நட்டு GDP கே
காரணமா இருக்க நம்ம  TASMAC
பள்ளிகூடத்த விட அதிகமாகும்
 கோவிலை விட கூட்டமாவும் இருக்குது …

இங்க ரோடுல  படுத்து , 'பன்' கும் 'டீ' கும்  
அளஞ்சவங்கள பங்களாவும்  BMW காரும்
வாங்க வெச்சது இந்த சிங்கரா சென்னை !
சேட்டு நகை கடை , செட்டியார் மளிகை கடை
கவுண்டர் அரிசி மில் என்று யார் வந்து
எத வெச்சாலும் வாழ வெக்குது
இந்த சென்னை பட்டணம் !

கலாம்  , காமராஜ்  , கலைஞர் ,
ரெஹ்மான் , ராஜா , ரஜினி , கமல் ,
மணி ரத்னம் , இஸ்ரோ மயில் சாமி  என
பெரிய மனிதர்களை 
உருவாக்கி விட்டது இந்த சென்னை  !
இது இருப்பது தான் இந்தியாவுக்கு கீழ
ஆனா இந்தியா மேல வருவதே
இந்த சிங்கார சென்னையால ….