Monday, March 15, 2010

என் முதல் வெளிநாட்டு பயணம்

The other end of the world - Jacksonville

jacksonville ஊர்
ஊரெல்லாம் கார்
ஆங்காங்கே பார்
கூட்டம் எங்கும் இல்லை
இந்த ஊரில் ...
ஆனால் நாட்டம் அதிகம் உண்டு
எனக்கு ....

வெயிலும் மழையும் குளிரும்
எதிர்க்கட்சி ஆனாலும்
ஒரே மேடையில்
சொற்பொழிவு ஆற்றுகின்றன ...

பனிமழைகள் சில நேரம்
சுனை மழைகள் சில நேரம்
கண்ணாடி சாலையை
கழுவிக்கொண்டு
இருக்கின்றன ...

மூச்சிடும் சத்தம் கூட தெரியாத
ஒரு ரம்யம் !!!
டீக்கடை இல்லை ...
அரசியல் பேச ஆள் இல்லை
மறியல் செய்ய மக்கள் இல்லை
பொது பேருந்தும் share atto உம்
போக்குவரத்தை பாதிப்பதில்லை !

எதிலும் ஒரு ஒழுங்கு
தெருவெல்லாம் வண்ண விளக்கு
தினமும் ....
திருவிழாக்காலம் தான் !!!
ஆனால்
சாமியும் பக்தனும்
அரசியல் வாதியும் தொண்டனும்
வருவதில்லை ... போவதில்லை ...
சாலை வழியே ...

ஓலிநாடா கட்டி
ஒப்பாரி வைப்பதில்லை !
கட் அவுட் வைத்து
காசை கரியாக்கி
அதன் சாம்பலில்
சந்தோஷப்படுவதில்லை !
முத்தம் இடும் சத்தம் கூட
சில நேரம் கேட்கும் !
ஆனால் எவனும் குடித்து விட்டு
போடும் சத்தம் கேட்காது ...

இங்கு வந்தும் கவிதையா
என என்னலாம் ....
யாரோடு நான் பேசுவேன்
தனிமையில் தள்ளாடும்போது
பேனா தானே என்
பெண்டாட்டி ....

3 comments:

  1. Hey man wats going on there ?

    ReplyDelete
  2. Wow, I see a diligent student who can speak out his heart. Superb Anbarasan. Hope Jacksonville will help you understand what is life and what you are to fly high in action.

    Never try to be no 1. instead try to be your best always!

    John Louis

    ReplyDelete